சிறப்புச் செய்தி: இந்தியாவை அதிரவைத்த ‘பாதுகாப்புத் துறை’ ஊழல்கள்!

ரஃபேல் போர் விமான ஊழல்தான் தேசம் முழுமைக்குமான இன்றைய விவாதப் பொருள். நாடு விடுதலை அடைந்த பின்னரான மாபெரும் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் ரஃபேல் ஊழல் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்திருக்கின்றன. நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஊழல்கள் என்பது 1948 முதலே தொடங்கிவிட்டது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் தேசம் எதிர்கொண்ட பாதுகாப்புத் துறை ஊழல்களின் தொகுப்பை பின்வருமாறு பார்ப்போம்.

ஜீப் ஊழல் – 1948

இங்கிலாந்துக்கான இந்திய தூதராகப் பணியாற்றியவர் வி.கே.கிருஷ்ண மேனன். அப்போது இந்திய ராணுவத்துக்கு 200 ஜீப்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், 155 ஜீப்கள் மட்டுமே வாங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ20 லட்சம் இழப்பு ஏற்படுத்தினார் கிருஷ்ண மேனன் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்திய அரசியலில் இந்த ஊழல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போபர்ஸ் ஊழல் – 1986

இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் பீரங்கிகளை கொள்முதல் செய்ததில் ரூ.139 கோடி அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என சுவீடன் வானொலி அம்பலப்படுத்தியது. இந்திய அரசியலில் புயலை கிளப்பியது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். இவ்வழக்கில் குவாத்ரோச்சி பெயர் அடிபட்டது. இந்த ஊழல் புகாரால் தேர்தலில் ராஜீவ் காந்தி படுதோல்வியைச் சந்தித்தார். 32 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் இந்திய அரசியல் அத்தியாயத்தில் இருந்து அகன்றுவிடவில்லை.

சவப்பெட்டி ஊழல் -1999

பாகிஸ்தானுடனான கார்கில் போரின்போது புதிய ஊழல்கள் பாதுகாப்புத் துறையில் அணிவகுத்து நின்றன. அதாவது கார்கில் போரின்போது ராணுவ வீரர்களுக்கான சவப்பெட்டிகள் கொள்முதல் செய்தது, ராக்கெட்டுகள் கொள்வனவு மற்றும் பனி காலணிகள் கொள்முதல் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றம்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போதும் காங்கிரஸின் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை பாஜக தோண்டினால், நாங்கள் சவப்பெட்டி ஊழலை கையிலெடுப்போம் என மிரட்டப்படுகிற அவலம் தொடருகிறது.

ஆபரேஷன் வெஸ்ட் எண்ட் – 2001

2001ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கான ஆயுதங்களை விநியோகம் செய்ய பிரிட்டன் நிறுவனமான வெஸ்ட் எண்ட் நிறுவனம் பெயரில் பாஜக தலைவராக இருந்த பங்காரு லட்சுமணனுக்கு லஞ்சம் கொடுக்கும் போலி ஆயுத பேர வீடியோ பதிவுகளை தெகல்கா இணையதளம் வெளியிட்டு அதிர வைத்தது.

டட்ரா ட்ரக் ஊழல் -2003

இந்திய ராணுவத்துக்காக ட்ரக் வாகனங்களை செக்கோஸ்லோவேகியாவின் டட்ரா நிறுவனம் சப்ளை செய்தது. இதற்காக ராணுவ தளபதியாக இருந்த தேஜிந்தர் சிங்குக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவ்வழக்கில் தேஜிந்தர் சிங் கைதும் செய்யப்பட்டார்.

அகஸ்டா வெஸ்லேண்ட் – 2013

இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ராணுவத்துக்கு 12 ஹெலிகாப்டர்களை ரூ. 3, 600 கோடிக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 360 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது புகார். இத்தாலியில் கிளம்பிய இந்தப் புயல் இந்தியாவில் இன்னமும் ஓயவில்லை. இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உட்பட 13 பேர் மீது இவ்விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ஊழல் முறைகேட்டில் இந்திய ஊடகங்களுக்கும் தொடர்பிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

ரஃபேல் போர் விமானங்கள் ஊழல்- 2018

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. பிரான்சு நிறுவனமும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனமும் போர் விமானங்களைத் தயாரிப்பது என்பது காங்கிரஸ் ஆட்சிக் கால ஒப்பந்தம். ஆனால் 2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு இதன் சந்தை மதிப்பையும் கூட்டியது. அத்துடன் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தையும் ரஃபேல் விமான தயாரிப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு பிரான்சுக்கு நெருக்கடி கொடுத்தது. இப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது ரஃபேல் போர் விமான ஊழல்.

**மதி**

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts