சிறப்புக் கட்டுரை: வேளாண் கடன் விவசாயிகளுக்குப் பயனளிக்கிறதா?

public

சஞ்சுக்தா நாயர்

வேளாண் கடன் 11 சதவிகிதம் அதிகரித்து 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2103ஆம் ஆண்டு வரையிலான கடந்த 13 ஆண்டுகளில் தொழில்முறை கடன் வழங்கும் நிறுவனங்களின் வேளாண் கடன் 9 சதவிகிதப் புள்ளிகள் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அரசின் இரண்டு முக்கிய திட்டங்கள் தான் விவசாயிகள் எளிதில் கடன் பெறுதலை உருவாக்கியுள்ளது என்று இந்தியா ஸ்பென்ட் நடத்திய ஆய்வு கூறுகிறது.

கிசான் கடன் அட்டைத் திட்டம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆகிறது. 4 சதவிகிதம் என்ற குறைவான வட்டி விகிதத்தில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க, விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும், விதைகள், வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வேளாண் கடன் திட்டம் உருவாக்கப்பட்டது. சிலர் இந்த அட்டைகளைப் பயன்படுத்தி முறைசாராக் கடன்களையும் பெற்றனர்.

இரண்டாவது திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டம் (ஏ.டி.டபிள்யூ.ஆர்.எஸ்.) இந்தத் திட்டத்தின்படி விவசாயி ஒருவர் முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றால், மீண்டும் அவர் கடன் பெறத் தகுதியானவராவார். ஆனால் 44 சதவிகிதக் கிராமப்புறத்தினர் அமைப்புசாரா நிறுவனங்களில் தான் கடன் பெறுகின்றனர். முறையான நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் கடன் பெற்றால் மட்டுமே ஏ.டி.டபிள்யூ.ஆர்.எஸ். முறையைப் பயன்படுத்தி மீண்டும் கடன் பெற முடியும். கடந்த 10 ஆண்டுகளில் மூன்றில் ஒருவர் கூட இம்முறையில் சான்றிதழ் பெற்றுப் புதிய கடன்களுக்கு விண்ணப்பிக்கவில்லை.

இந்தியாவின் தற்போதைய வேளாண் கடன் மதிப்பானது (10 லட்சம் கோடி), இந்திய வேளாண் மற்றும் கிராமப்புற நிதியைப் போல 5.3 மடங்கும், சுகாதார நிதியைப் போல 20.4 மடங்கும் உள்ளது.

இதன் முதல் பாதியில் வேளாண் கடன் எப்படி விவசாயிகளின் தற்கொலை, பருவநிலை மாற்றம், சாகுபடி வீழ்ச்சி, தொழில் கடன் நிறுவனங்களின் வட்டி விகித உயர்வு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தொழில்முறை கடன் வழங்கும் நிறுவனங்களில் வங்கிகளை விட 4 மடங்கு கூடுதலான விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இரண்டாவது பாதியில் மத்திய அரசின் நிதித் திட்டங்கள், கடன் திட்டங்கள் விவசாயிகளுக்கு எப்படிப் பயன்பட்டது, என்பது குறித்துக் காண்போம்.

மேலே சொன்னது போல, தொழில்முறை கடன் வழங்கும் நிறுவனங்கள் வங்கிகளை விட நான்கு மடங்கு வட்டி வசூலிப்பதால் 2002ஆம் ஆண்டில் 19.6 சதவிகிதமாக இருந்த கிராமப்புறக் கடன் மதிப்பு 2013ஆம் ஆண்டில் 28.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அரசாங்கம் வேளாண் கடனை மேம்படுத்தத் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே வருகிறது. 1969ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் வேளாண் துறைக்குக் கடன் வழங்கத் தள்ளப்பட்டன. அதன்பிறகு 1975ஆம் ஆண்டு கிராமப்புற வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு வேளாண் கடன் அளிக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கிகள் (நபார்டு) உருவாக்கப்பட்டன.

2017-18ஆம் நிதியாண்டில் வேளாண் கடன் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை எட்டும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதன் மதிப்பு ரூ.9.3 லட்சம் கோடியாக இருந்தது. 2005-06ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது வேளாண் கடன் மதிப்பு 9.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2005-06ஆம் நிதியாண்டில் வேளாண் கடன் ரூ.1,08,500 லட்சம் கோடியாக இருந்தது.

2005-06ஆம் நிதியாண்டிலிருந்து 2017-18ஆம் நிதியாண்டு வரை வேளாண் கடன் மீதான நிதிநிலை மதிப்பீடும் 9.3 மடங்கு அதிகரித்துள்ளது. அரசாங்கம் எப்போதும் முன்பை விடக் கூடுதலான நிதி மதிப்பீட்டையே வேளாண் கடனுக்கு ஒதுக்குகிறது. அமைப்புசாரா கடன் வழங்குபவர்களிடமிருந்து (வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள்) கடன் பெறுவது மிக எளிதாக உள்ளது. ஆனால் வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன் பெறுவதற்குச் சில விதிமுறைகள் உள்ளன. எனவே கிராமப்புற விவசாயிகள் தொழில்முறை கடன் வழங்குபவர்களிடமும், நண்பர்களிடமும் கடன் வாங்குவதையே அதிகமாக விரும்புகின்றனர். எனவே இந்த வகையான கடன்முறைகள் கே.சி.சி. மற்றும் ஏ.டி.டபிள்யூ.டி.ஆர்.எஸ். போன்ற திட்டங்களைத் தோல்வியடையச் செய்துள்ளன.

கிசான் கடன் அட்டைத் திட்டம் 1998ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகள் விதைகள் வாங்கவும், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் வாங்கவும் கடன் வாங்கினர். பணத்தை ஏடிஎம்களில் எடுத்துக்கொண்டனர். 2004ஆம் ஆண்டில் கே.சி.சி. திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்குக் கடன் வழங்கப்பட்டது. குறு விவசாயிகள் (2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள்) இந்தத் திட்டத்தில் மிகவும் எளிதாக வேளாண் பொருட்கள் வாங்கக் கடன் பெற்றனர். மேலும், சிறிய அளவில் பால் உற்பத்தி செய்யவும் இதில் கடன் பெற்றனர்.

கே.சி.சி.யைப் பயன்படுத்தி விவசாயிகள் ஆண்டுக்கு 1.49 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்டுகின்றனர். நபார்டு திட்டத்தின் மூலம் தனிநபர் ஒவ்வொருவரும் ரூ.69,850 வரை லாபமீட்டுகின்றனர். கே.சி.சி.யில் தானியங்கி முறையில் விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடும் செய்யப்படுகிறது. வங்கிக் கணக்குகளிலிருந்து பயிர் காப்பீட்டிற்குப் பணம் செலுத்தப்படுகிறது என்று கடந்த வருடம் மார்ச் 31ஆம் தேதி ’தி வயர்’ ஊடகம் கூறியுள்ளது. சில விவசாயிகளுக்குக் காப்பீடு சரியாகக் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

2008ஆம் ஆண்டில் ஏ.டி.டபிள்யூ.டி.ஆர்.எஸ் திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் கடன் தள்ளுபடி தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கிறது. இதன்படி சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் கடன் தள்ளுபடி செய்யலாம். மற்ற விவசாயிகளுக்கு 25 சதவிகித கடன் தொகையைத் தள்ளுபடி செய்யலாம்.

ஆனால் பொதுக் கணக்கு ஆய்வகம் (சி.ஏ.ஜி.) தனது அறிக்கையில், ’அரசின் பயன்களைப் பெறத் தகுதியுள்ள 13.5 சதவிகித விவசாயிகள் ரூ.3.58 கோடி மதிப்பிலான பலன்களைப் பெறவில்லை. தகுதியற்ற 8.5 சதவிகித விவசாயிகள், விவசாயப் பணிகள் அல்லாத மற்ற பணிகளுக்குக் கடன்களைப் பெற்றுள்ளனர் என்று கூறுகிறது.

34 சதவிகிதத் தகுதியான விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான உரிய சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இத்தகைய விவசாயிகள் மீண்டும் புதிய கடன்களை வாங்க இயலாமல் தவிக்கின்றனர். இவ்வாறு ரூ.160 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் மூலம் கடன் பெற்றால் மட்டுமே விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலே கூறியதுபோல 44 சதவிகித கிராமப்புற விவசாயிகள் வட்டிக்காரர்களிடம், முறைசாரா அமைப்புகளிடம் கடன் பெறுகின்றனர். இந்தக் கடன்களை ஒருபோதும் அரசால் தள்ளுபடி செய்ய இயலாது. இவ்வாறு முறைசாரா நிறுவனங்களிடம் கடன் பெறுபவர்கள் வேளாண் அல்லாத மற்ற பணிகளுக்கும் அதிகளவில் கடன் பெறுகின்றனர்.

சில குடும்பங்களில் முழுக் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் வெளியில் முறைசாரா நிறுவனங்களிடம் கடன் பெற்று அந்தக் கடன் அதிகரித்த நிகழ்வும் நடந்துள்ளது என்று 2011ஆம் ஆண்டு உலக வங்கி ஆய்வுகள் கூறுகின்றன. சாகுபடியில் இழப்பு ஏற்பட்டாலோ அல்லது விவசாயிகள் ஆர்வம் இருந்தாலோ ஒரு வருடத்தில் வட்டியில்லாமல் கடனைச் செலுத்தும் நடைமுறையும் கே.சி.சி.யில் இருந்தது. இதைப் பயன்படுத்தி முறைசாரா அமைப்புகளிடம் அதிக வட்டியில் கடன் வாங்கிவிட்டு, அவற்றைச் செலுத்த கே.சி.சி.யில் கடன் வாங்கும் செயலும் நடக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெற்று வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதே முக்கிய நோக்கமாகக் கொள்ளப்பட்டது. ஜூன் 2017இல் விவசாயிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கும் (ஆண்டுக்கு 4 சதவிகித வ்பட்டியில் ரூ.3 லட்சம்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நன்றி: [இந்தியா ஸ்பென்ட்](http://www.indiaspend.com/cover-story/as-formal-farm-credit-grows-so-does-hold-of-moneylenders-heres-why-22163)

தமிழில்: [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)

மின்னஞ்சல் முகவரி: prakash@minnambalam.com�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *