சிறப்புக் கட்டுரை: நமக்குத் திராணியிருக்கிறதா?

public

பிரதமருக்குத் திறந்த மடல்

**பாலியல் வன்முறைகளைக் கண்டித்து பிரதமருக்கு முன்னாள் குடிமைப் பணியாளர்களின் திறந்த மடல்**

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு,

நம்மால் பேணிக் காக்கப்பட வேண்டுவனவாக அரசியலமைப்புச் சட்டத்தால் கூறப்படுகின்ற நம் நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயக மற்றும் முற்போக்குப் பண்புகள் மலிந்துவருவது கண்டு, மனவருத்தத்துடன் சென்ற ஆண்டு கடிதம் எழுதிய ஓய்வுபெற்ற குடிமைப் பணியாளர்கள் நாங்கள். அந்தக் காலகட்டத்தில் ஆளும்வர்க்கத்தின் செயல்களால் நிலவிவந்த வெறுப்பும் அச்சமும் கலந்த சூழலை எதிர்த்த குரல்களுக்கு வலுசேர்க்கவே அக்கடிதத்தை எழுதினோம். இன்றும் அன்றுபோல, அரசியலமைப்புச் சட்டத்தைத் தவிர, எந்த அரசியல் கட்சியையோ, அரசியல் சித்தாந்தத்தையோ சாராதவர்களாக இக்கடிதத்தை எழுதுகிறோம்.

அரசியலமைப்பின் வழி ஆட்சி செய்வதாக உறுதியேற்று, ஆட்சியில் இருக்கின்ற தாங்களும் தங்கள் கட்சியும், இத்தகைய ஆபத்தான சரிவில் நாம் இருக்கும் இந்தச் சூழலில் உயிர்த்தெழுந்து, ஆவன செய்து, மக்களின், குறிப்பாக உயிர் மற்றும் உரிமைகள் பறிபோய்விடுமோ என்று அச்சத்தில் இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நம்பிக்கை அளிப்பீர்கள் என்றும் நம்பினோம். அந்த நம்பிக்கை அழிந்துவிட்டது.

கத்துவா மற்றும் உன்னாவோ ஆகிய இடங்களில் நடந்திருக்கும் சொல்ல முடியாத துயரங்களின்போது, இந்த அரசு குறைந்தபட்சமாகச் செய்ய வேண்டியதைச் செய்வதில்கூடத் தோல்வியடைந்துள்ளது. நன்னெறி, ஆன்மிக மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பெற்றிருப்பதில் பெருமை கொண்ட நாடாகவும் சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்ற சமூகமாகவும் இருக்கும் நாம், இன்றும் தோற்றுவிட்டோம். இந்து என்ற பெயரில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வன்முறைக்கு ஆளாக்குகின்ற நிலைமையைத் தொடரவிட்ட நாம் மனிதர்களல்ல.

எட்டு வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்கின்ற மிருகத்தனம், நாம் அடைந்திருக்கும் இழிநிலையைக் காட்டுகிறது. விடுதலைக்குப் பின் இக்காலமே நம் நாட்டின் இருண்ட காலம். இத்தகைய காலத்தில், நம் நாட்டின் அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் மிகவும் வலுவற்றதாகவும் போதாமலும் இருக்கின்றன. இதிலிருந்து வெளிவரக்கூடிய வழி கண்ணுக்கெட்டிய தொலைவுவரை தெரியாத நிலையில், வெட்கித் தலைகுனிகிறோம். அந்தப் பகுதிகளில் குடிமைப் பணியில் இருக்கும் இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய எளிய மக்களைப் பாதுகாக்கச் சட்டத்தால் நியமிக்கப்பட்டிருந்தும், அதில் தோல்வியடைந்திருப்பது மேலும் வெட்கமளிக்கிறது.

**வெறுப்பும் பிரிவினைவாதமும்**

பிரதமர் அவர்களே, நாங்கள் இப்போது இக்கடிதத்தை எழுதுவதன் நோக்கம், ஒரு சமூகமாக நாம் அடைந்திருக்கும் தோல்வியைக் கூறுவதற்கோ, மக்களின் அழுகைக்கும் துயரத்துக்கும் குரல் கொடுப்பதற்கோ, சமூகத்தின் அறம் மடிந்துகிடப்பதைப் பற்றி அழுவதற்கோ மட்டுமல்ல. நம் அரசியலிலும் சமூகத்திலும் ஏன், தினசரி நடக்கும் உரையாடல்களிலும்கூட நுழைக்கப்பட்டிருக்கும் வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் பரப்புவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் தங்கள் கட்சியையும் கட்சியிலிருந்து தோன்றியிருக்கும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் பல சிறு இயக்கங்களுக்கும் எதிரான எங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதற்கும்தான் இக்கடிதம். இந்த வெறுப்பும் பிரிவினைவாதமும்தான் கத்துவாவிலும் உன்னாவோவிலும் நடந்த சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.

ஜம்மு மாகாணத்தில் உள்ள கத்துவாவில் நடந்த கோரத்துக்கு, சங்க பரிவாரத்தினால் வலுப்பெற்றிருக்கும் பிரிவினைவாத சக்திகள் ஏற்படுத்திய பெரும்பான்மைவாத வன்மம் நிறைந்த சூழல்தான் காரணம். அவ்வாறு வன்முறையில் ஈடுபடுவதற்குத் தங்கள் அரசியல் தலைவர்களின் ஆதரவு இருப்பது இந்தச் சக்திகளுக்கு நன்றாகத் தெரியும். அதனாலேயே இந்து – இஸ்லாமியர்களுக்கிடையில் பிரிவை உண்டாக்குவதன் மூலம் பெரும் செல்வாக்கைப் பெறுகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் உன்னாவோவில், ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ மாஃபியாக்களிடம் வாக்குகளுக்காகத் தாங்கள் வைத்திருக்கும் உறவுதான், இத்தகைய வன்புணர்வுகளையும் கொலைகளையும் செய்வதற்கான அதிகாரத்தையும் தைரியத்தையும் தருகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பின் மாநில அரசு, குற்றவாளியை விடுத்துப் பாதிக்கப்பட்டவரையும், அவர் குடும்பத்தையும் தாக்குவது, அரசு எவ்வளவு இழிவாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. உயர் நீதிமன்றத்தின் ஆணை வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வழிசெய்ய அரசுக்கு எந்த நாட்டமுமில்லை என்பதைக் காட்டுகிறது.

இந்த இரண்டு மாநிலங்களிலும், தங்கள் கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. கட்சிக்குள் மற்றவர்களைக் காட்டிலும்,சர்வாதிகாரியாக இருக்கும் தாங்களும் கட்சித் தலைவரும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் தாங்களோ, இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் எதிர்ப்பு முற்றும்வரை வாய் திறக்காமல் அமைதி காத்திருந்தீர்கள்.

பேசியபோதும், அந்தச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்தீர்களே ஒழிய, அதற்குப் பின்னால் இருக்கும் வகுப்புவாத வன்மத்தைக் கண்டிக்கவோ, அதற்குத் துணை நிற்கின்ற சமூக, அரசியல் மற்றும் ஆட்சிமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான முனைப்பைக் காட்டவோ இல்லை. சங்க பரிவாரத்தால் இந்த வன்மம் பரவிக்கொண்டிருக்கும்போது, இந்தப் பொய் மன்னிப்புகளும் சத்தியங்களும் போதாது.

பிரதமர் அவர்களே, இவ்விரு சம்பவங்களும் சாதாரண சம்பவங்கள் அல்ல. காலப்போக்கில் மறைந்து மறக்கும்படியானவை அல்ல. இது ஒரு திருப்புமுனை. இத்தகைய சம்பவங்களால் அரசியலமைப்பு, ஆட்சி முறைக்கும் நன்னெறிக்கும் ஏற்பட்டிருக்கும் சிக்கலைத் தீர்க்க ஒரு குடியரசாகிய நமக்குத் திராணியிருக்கிறதா என்பதைக் காட்டுவதற்கான தருணம் இது.

அத்தகைய நோக்கில், தங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது:

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்புகொள்ளுங்கள். அவர்களிடம் நம் நாட்டு மக்களாகிய அனைவரின் சார்பாக மன்னிப்புக் கோருங்கள்.

கத்துவா வழக்கைத் துரிதப்படுத்துங்கள். உன்னாவோ வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கும்படி நீதிமன்றத்திடம் கோருங்கள்.

இத்தகைய சம்பவங்களால் இறந்தவர்களின் நினைவாக இஸ்லாமிய மக்களுக்கும் சிறுபான்மையின மற்றும் தலித் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும், உயிர் மற்றும் உரிமைகள் பறிபோகாமல் சுதந்திரமாக வாழ்வதற்குப் பாதுகாப்பாக அரசு இருக்கும் என்பதையும் அதற்குக் குந்தகம் விளைந்தால் அரசு முழு பலத்துடன் குற்றவாளிகளை எதிர்கொள்ளும் என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்துங்கள்.

வெறிச் செயல்களில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களை உடனடியாக நீக்க வழிசெய்யுங்கள்.

சமூகமாகவும், அரசியல் மூலமாகவும், ஆட்சி முறையின் மூலமாகவும் இத்தகைய செயல்களைத் தடுப்பது குறித்து ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்.

மிகவும் தாமதமாக அமைந்தாலும்,இவை சரிவிலிருக்கும் நம் சமூகத்தை சிறிதேனும் மீட்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

இப்படிக்கு,

எஸ்.பி. ஆம்ப்ரோஸ் ஐஏஎஸ், முன்னாள் துணைச் செயலாளர், கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம், இந்திய அரசு

வப்பாலா பாலசந்திரன், ஐபிஎஸ், முன்னாள் சிறப்புச் செயலாளர், அமைச்சரவை செயலகம், இந்திய அரசு

சந்திரசேகர் பாலகிருஷ்ணன், ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், நிலக்கரித் துறை அமைச்சகம், இந்திய அரசு

பிரதீப் பட்டாசார்யா ஐஏஎஸ், முன்னாள் துணை முதன்மைச் செயலாளர், திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பயிற்சி நிறுவனம், மேற்கு வங்க அரசு

மீரன் சி போர்வான்கர் ஐபிஎஸ், முன்னாள் டிஜிபி, காவலர் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றப் பணியகம், இந்திய அரசு

சுந்தர் பர்ரா ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், மகாராஷ்டிர அரசு

ஜாவீத் சவுதரி ஐஏஎஸ், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர், இந்திய அரசு

அன்னா தானி ஐஏஎஸ், முன்னாள் துணை முதன்மைச் செயலாளர், மகாராஷ்டிர அரசு

சுர்ஜித் தாஸ் ஐஏஎஸ், முன்னாள் முதன்மைச் செயலாளர், சத்தீஸ்கர் அரசு

விபா பூரி தாஸ் ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், பழங்குடியின விவகாரத் துறை, இந்திய அரசு

நரேஷ்வர் தயாள் ஐஎஃப்எஸ், முன்னாள் செயலாளர், வெளியுறவுத் துறை அமைச்சகம்

கேஷவ் தேசிராஜு ஐஏஎஸ், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர், இந்திய அரசு

எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், ஹரியானா அரசு

சுசில் தூபே ஐஎஃப்எஸ், முன்னாள் சுவீடன் நாட்டுக்கான இந்திய தூதர்

கெ.பி.ஃபெபியன் ஐஎஃப்எஸ், முன்னாள் இத்தாலி நாட்டுக்கான இந்திய தூதர்

மீனா குப்தா ஐஏஎஸ், முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், இந்திய அரசு

ரவி வீர குப்தா ஐஏஎஸ், முன்னாள் ஆளுநர், ரிசர்வ் வங்கி

வாஜகத் ஹபிபுல்லா ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், இந்திய ஆரசு மற்றும் முதன்மைத் தகவல் ஆணையர்

சஜ்ஜத் ஹாசன் ஐஏஎஸ், முன்னாள் ஆணையர் (திட்டமிடல்), மணிப்பூர் அரசு

எம்.ஏ.இப்ராஹிம் ஐஏஎஸ், முன்னாள் முதன்மைச் செயலாளர், பீகார் அரசு

அஜய் குமார், முன்னாள் இயக்குநர், விவசாயத் துறை அமைச்சகம், இந்திய அரசு

அருண் குமார், ஐஏஎஸ், முன்னாள் தலைவர், தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், இந்திய அரசு

ஹர்ஷ் மந்தர் ஐஏஎஸ், மத்தியப் பிரதேச அரசு

அதிதி மேதா ஐஏஎஸ், முன்னாள் துணை முதன்மைச் செயலாளர், ராஜஸ்தான் அரசு

சுனில் மித்ரா ஐஏஎஸ், முன்னாள் நிதித் துறைச் செயலாளர், இந்திய அரசு

சோபா நம்பீஸன் ஐஏஎஸ், முன்னாள் முதன்மைச் செயலாளர் (திட்டமிடல்), கர்நாடக அரசு

அமிதாபா பாண்டே ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், இன்டர் ஸ்டேட் கவுன்சில், இந்திய அரசு

நிரஞ்சன் பந்த் ஐஏஏஎஸ், முன்னாள் துணைத் தலைமைக் கணக்காயர்

பி.ஆர்.பார்த்தசாரதி, ஐபிஎஸ், முன்னாள் இயக்குநர், ஊழல் ஒழிப்பு செயலகம், மகாராஷ்டிர அரசு

அலீக் பெர்தி ஐஏஏஎஸ், முன்னாள் செயலாளர், நிலக்கரித் துறை அமைச்சகம், இந்திய அரசு

என்.கே. ரகுபதி ஐஏஎஸ், முன்னாள் ஆணையர், பணியாளர் தேர்வு ஆணையம், இந்திய அரசு

எம்.ஒய்.ராவ் ஐஏஎஸ்

சுஜாதா ராவ் ஐஏஎஸ், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர், இந்திய அரசு

ஜூலியோ ரிபேரோ ஐபிஎஸ், பஞ்சாப் மாநில ஆளுநருக்கான முன்னாள் ஆலோசகர் மற்றும் ரொமேனியா நாட்டுக்கான இந்திய தூதர்.

அருணா ராய் ஐஏஎஸ்

மனபேந்திரா ராய் ஐஏஎஸ், முன்னாள் துணை முதன்மைச் செயலாளர், மேற்கு வங்க அரசு

உம்ராவ் சலோதியா ஐஏஎஸ், முன்னாள் தலைவர், ராஜஸ்தான் சாலைப் போக்குவரத்துக் கழகம், ராஜஸ்தான் அரசு

தீபக் சனன் ஐஏஎஸ், முதலமைச்சருக்கான முன்னாள் முதன்மை ஆலோசகர், ஹிமாசலப் பிரதேச அரசு

இ.ஏ.எஸ்.சர்மா ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், பொருளாதார விவகாரத் துறை, நிதித் துறை அமைச்சகம், இந்திய அரசு

என்.சி.சக்சேனா ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், திட்டமிடல் ஆணையம், இந்திய அரசு

அர்தேந்து சேன் ஐஏஎஸ், முன்னாள் முதன்மைச் செயலாளர், மேற்கு வங்க அரசு

அபிஜித் சென்குப்தா ஐஏஎஸ், செயலாளர், கலாசாரத் துறை அமைச்சகம், இந்திய அரசு

அஃப்தாப் சேத் ஐஎஃப்எஸ், ஜப்பான் நாட்டுக்கான இந்திய தூதர்

நவ்ரேகா சர்மா ஐஎஃப்எஸ், இந்தோனேஷியா நாட்டுக்கான இந்திய தூதர்

ஹர்மந்தர் சிங் ஐஏஎஸ், முன்னாள் இயக்குநர், ஊழியர் காப்பீட்டு நிறுவனம், இந்திய அரசு

ஜவஹர் சர்கார் ஐஏஎஸ், முன்னாள் செயலாளர், கலாசாரத் துறை அமைச்சகம், இந்திய அரசு

கே.எஸ்.சுப்பிரமணியன் ஐபிஎஸ், முன்னாள் இயக்குநர், நிர்வாகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம், திரிபுரா அரசு

கீதா தூபல் ஐஆர்ஏஎஸ், முன்னாள் பொது மேலாளர், கொல்கத்தா மெட்ரோ ரயில்

ரமணி வெங்கடேசன் ஐஏஎஸ், முன்னாள் இயக்குநர், யஷ்வ்ந்தராவ் சவான் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனம், மகாராஷ்டிர அரசு

**ஆங்கிலத்திலிருத்து மொழிபெயர்ப்பு: கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *