பிரச்சி சால்வே
இந்தியாவில் சுகாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலை இருந்தாலும்கூட, தேசிய சுகாதாரத் திட்டத்தின் நிதிகள் செலவிடப்படாமல் உள்ளன. 2016ஆம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் நிதிகளை மாநிலங்கள் செலவிடாமல் வைத்திருக்கும் நிதி 29 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. தாமதமான நிதிப் பரிமாற்றம், தவறான நிதி ஒதுக்கீடுகளையும் இந்த அறிக்கை ஆய்ந்துள்ளது.
தேசிய சுகாதாரத் திட்டம் 2005ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைவருக்கும் சுகாதாரச் சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், இந்தியாவின் மிகப்பெரும் சுகாதாரத் திட்டமாகும். இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களில், மகப்பேறு கால நலன் மற்றும் குழந்தை நலனை உறுதி செய்வது, தொற்றுநோய்கள் மற்றும் தொற்று சாராத நோய்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை உள்ளடங்கும். தேசிய சுகாதாரத் திட்டத்தின் நிதிகளைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பின்வரும் தகவல்கள் விளக்குகின்றன.
2016ஆம் ஆண்டில் உலகளாவிய மகப்பேறு கால உயிரிழப்புகளில் இந்தியாவுக்கு 17 விழுக்காடு பங்கு உள்ளது. தொற்று சாராத நோய்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இந்தியாவுக்கு 61 விழுக்காடு பங்குள்ளது. தொழுநோய், மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் இன்னும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். செலவிடுவதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் 2011-12ஆம் ஆண்டில் 5.5 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டனர்.
உள்ளாட்சி சுகாதார அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அவற்றின் திறன்களை மேம்படுத்துவதற்காக மாநில சுகாதார அமைப்புகளுக்காகத் தேசிய சுகாதாரத் திட்டம் நிதிகளை வழங்குகிறது. இந்தியாவின் கிராமப்புற சுகாதார மையங்களில் மனிதவளத் தட்டுப்பாடும், உள்கட்டமைப்பு பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது. சிறு மையங்களில் 20 விழுக்காடு மனிதவளத் தட்டுப்பாடு உள்ளது. இந்த மையங்களில் 29 விழுக்காட்டுக்கு ஒழுங்கான நீர் விநியோகம் கூட இல்லை; 26 விழுக்காடு மையங்களுக்கு மின் விநியோகமும் இல்லை; 11 விழுக்காடு மையங்கள் அனைத்துப் பருவநிலைகளையும் தாக்குப்பிடிக்கும் சாலைகளால் இணைக்கப்படவில்லை.
சுகாதாரச் சேவைகளில் வங்கதேசம், ஆப்பிரிக்க நாடான சூடான், கினி போன்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 விழுக்காட்டைச் சுகாதாரத்துக்காகச் செலவிடுகிறது. இது பிரிக்ஸ் நாடுகளிலேயே மிகக் குறைவானதாகும்.
நிதி ஒழுங்கின்மை குறித்த குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. நிதி ஒதுக்கீட்டுக்கான தேவைகளை மாநிலங்கள் பூர்த்தி செய்ததும் நிதி வழங்கப்பட்டது என்று தேசிய சுகாதாரத் திட்டத்தின் கூடுதல் செயலாளரான மனோஜ் ஜலானி கூறுகிறார். அவர் பேசுகையில், “தேசிய சுகாதாரத் திட்டம் சாராத நோக்கங்கள்/மாநில அரசுத் திட்டங்களுக்கு தேசிய சுகாதாரத் திட்டத்தின் நிதியை வழங்குவதற்கு அமைச்சகம் ஆதரவளித்ததே இல்லை. அவ்வாறு நிதிகள் வழங்கப்படுவது குறித்த தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தால், அந்தத் தொகையை உரிய மாநில அரசிடமிருந்து மீட்போம். அதுபோன்ற செயல்பாடுகளைத் தவிர்க்கும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
சிஏஜி ஆய்வின் தகவல்களின்படி, மாநில சுகாதார அமைப்புகளால் செலவிடப்படாத தொகையின் மதிப்பு 2011-12ஆம் ஆண்டில் ரூ.7,375 கோடியிலிருந்து 2015-16ஆம் ஆண்டில் ரூ.9,509 கோடியாக அதிகரித்துள்ளது. மாநில கருவூலங்களிலிருந்து சுகாதார அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை 2014-15ஆம் ஆண்டில் ரூ.5,037 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.4,016 கோடியும் தாமதமாகியுள்ளது. இந்தப் பரிமாற்றங்கள் 15 நாட்களில் நிறைவாகியிருக்க வேண்டும். ஆனால், 50 முதல் 271 நாட்கள் வரை தாமதமாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் *முக்கிய மந்திரி சுப லஷ்மி யோஜனா* (பெண் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் திட்டம்), *சுகிபவா திட்டம்* போன்ற இதர திட்டங்களுக்காக ரூ.36 கோடி அனுப்பப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் வெறும் 32 விழுக்காட்டை மட்டும் 18 மாநில அரசுகள் செலவிட்டுள்ளன. 2013-16 மாநில திட்டங்களுக்காக ரூ.133 கோடி தேவைப்பட்டது. ஆனால், அதில் 64 விழுக்காடு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையையும் கூட மாநில அரசுகள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அத்தொகையில் வெறும் ரூ.43 கோடியை (32 விழுக்காடு) மட்டுமே மாநில அரசுகள் செலவிட்டுள்ளன.
தேசிய சுகாதாரத் திட்டத்துக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் என இருதரப்புமே நிதி அளிக்கின்றன. அதில் மத்திய அரசு 60 விழுக்காடு நிதியை வழங்குகிறது. 2013-14ஆம் ஆண்டு வரையில் மாநில சுகாதார அமைப்புகளுக்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் நேரடியாக நிதியை வெளியிட்டு வந்தது. ஆனால் தற்போது மாநில அரசுகளுக்கு நிதி அளிக்கப்பட்டு, பின்னர் மாநில அரசுகளிடமிருந்து சுகாதார அமைப்புகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.
மாநில சுகாதார அமைப்புகளோ பல்வேறு மாவட்ட சுகாதார அமைப்புகளுக்கு நிதியைப் பிரித்தளிக்கின்றன. அங்கிருந்து தொகுதிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு சமூகங்கள் மற்றும் ஆரம்ப நிலைச் சுகாதார மையங்கள், கிராமச் சுகாதார ஊட்டச்சத்துக் குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.
2011-16ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.1,10,930 கோடியில் மாநில சுகாதார அமைப்புகள் வெறும் ரூ.1,06,180 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளன. சில மாநிலங்களில் செலவிடப்படாத தொகையின் விகிதம் 40 விழுக்காடு முதல் 76 விழுக்காடு வரை உள்ளது. மேகாலயாவில் வெறும் 76 விழுக்காடு தொகை செலவிடப்படவில்லை. உத்தரப் பிரதேசத்திலோ 52 விழுக்காடு தொகை செலவிடப்படவில்லை.
ஒன்றிய அமைச்சரவை உருவாக்கியுள்ள செயல்முறைகளின்படி, வழங்கப்பட்ட தொகையைச் செலவிடாத மாநிலங்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு அந்த மாநில அரசுக்கும் தண்டனை விதிக்கப்படவில்லை. நிதியைப் பெற்ற 15 நாட்களுக்குள் மாநில அரசுகள் மாநில சுகாதார அமைப்புகளுக்கு அனுப்பிவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், வங்கி டெபாசிட் விகிதத்துக்கு ஏற்ப 5.75 விழுக்காடு முதல் 7.25 விழுக்காடு வரை மாநில அரசுகள் வட்டி செலுத்த வேண்டும்.
மிஷன் பிளெக்சிபில், ஆர்சிஎச் பிளெக்சிபில் ஆகிய திட்டங்களின் கீழ் 2014-15ஆம் ஆண்டில் ரூ.49 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.450 கோடியும் மாநில கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தொகை 2016ஆம் ஆண்டு மே மாதம் வரை மாநில சுகாதார அமைப்புகளுக்கு அனுப்பப்படவில்லை.
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கு நாங்கள் அனுப்பிய கேள்விகளுக்குப் பதில் வந்துள்ளது. அந்தப் பதிலில், பிரச்சினைகளைச் சரிசெய்வதற்காக ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகளில், புதிய நிதிகளை ஒழுங்குபடுத்துவது, பொது நிதி மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்துவது, மாநில நிதிகளைத் தணிக்கை செய்வது, மாநில நிதித் துறை ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பது, மாநில கருவூலங்களுக்கும், சுகாதார அமைப்புகளுக்கும் இடையே நிதிப் பரிமாற்றம் உடனடியாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது ஆகியன அடங்கும்.
**நன்றி:** [இந்தியா ஸ்பெண்ட்](http://www.indiaspend.com/cover-story/as-health-crises-grow-29-of-funds-with-states-not-spent-in-5-years-82058)
**தமிழில்: அ.விக்னேஷ்**
**நேற்றைய கட்டுரை:** [யூபிஐ பரிவர்த்தனைகளை ஏன் பயன்படுத்த வேண்டும்?](http://www.minnambalam.com/k/2018/08/28/14)
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**
**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**
**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**
**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**
�,”