மனுராஜ் சண்முகசுந்தரம்
(கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சீர்திருத்த நடவடிக்கைகள், அவற்றின் தாக்கங்கள் குறித்த [நேற்றைய]() கட்டுரையின் தொடர்ச்சி)
திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் முன்னோடியான திராவிடர் கழகமும் அரசியல் ரீதியாக ஒன்றுபடாமலிருந்த கால கட்டங்கள் உண்டு. ஆனால், பல பிரச்சினைகளில் இவ்விரு இயக்கங்களும் சித்தாந்த ரீதியாக ஒன்றுபட்டுச் செயல்பட்டு வந்துள்ளன. கடும் முரண்பாடுகளோடு திராவிடர் கழகம் பிளவுபட்டு, அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகியிருந்த ஓராண்டே கடந்திருந்த நிலையில் இரண்டு இயக்கங்களும் தோளோடு தோள் சேர்ந்து நின்ற ஒரு பிரச்சினை முன்னுக்கு வந்தது.
சமூக நீதியும் கல்வியும்
சென்னை மாநில அரசு *எதிர்* செம்பகம் துரைராஜன் வழக்கில், அரசுப் பணிகளிலும் கல்லூரிகளிலும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யும் அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. அந்த முடிவை எதிர்த்தே இரண்டு இயக்கங்களும் இணைந்து நின்றன. கருணாநிதி ஆட்சியில் 1969இல் பிற்படுத்தப்பட்டோர் துறை ஏற்படுத்தப்பட்டது. 1989இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை ஏற்படுத்தப்பட்டது. சட்டநாதன் ஆணையத்தைத் தொடர்ந்து 1982இல் ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் குறித்த ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1985இல் தனது பரிந்துரைகளை அளித்தது. ஆயினும் 1989இல் கருணாநிதி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் துணைப்பிரிவு சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
முஸ்லிம், கிறிஸ்துவ சமயங்களின் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சேர்ப்பதற்காக 2007இல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட கிறிஸ்துவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (தனியார் கல்வி நிறுவனங்கள் உள்பட கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ் வரும் அரசுப் பணிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த ஆக்கபூர்வ நடவடிக்கைகளின் பலன்கள் அடிமட்டம் வரையில் சென்றடைவதை உறுதிப்படுத்திட தமிழ்நாடு அருந்ததியர் (தனியார் கல்வி நிறுவனங்கள் உள்பட கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை மற்றும் மாநில அரசுப் பணிகள் நியமனங்களில் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் சிறப்பு இட ஒதுக்கீடு) சட்டம் 2009இல் நிறைவேற்றப்பட்டது.
மற்றொரு புதுமை நடவடிக்கையாக, தமிழ்வழிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அரசுப் பணி நியமனங்களில் முன்னுரிமை அளிப்பதற்காக 2010இல் தமிழ்வழி பயின்றோர் நியமன முன்னுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டில், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் எந்தத் தொழிற் கல்லூரிகளில் சேர்ந்தாலும் தங்களது கல்விக் கட்டணத்தையும் இதர கட்டணங்களையும் செலுத்துவதற்கு உதவிடும் கல்வி உதவித்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
வேறு எந்தக் காலகட்டத்தையும் விட, கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆண்டுகளில்தான் பொறியியலுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பல அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. 1997இல் சென்னையில், நாட்டின் ஒரு முன்னணி சட்டக் கல்வி நிறுவனமாக, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவைப் போற்றிடும் வகையில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வட்டார தலைமையகங்களுடன் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் அந்த முன்னணி பொறியியல் பல்கலைக்கழகத்தின் செயல்பாடு நான்கு மடங்காக அதிகரித்தது.
அதேபோல், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கட்டடக் கலை ஆகிய தொழிற்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைமுறையைச் சீராக்குவதற்காக தமிழ்நாடு தொழிற்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை சட்டம் – 2006 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினர் அல்லாத அரசு உதவி பெறும் (தனியார்) கல்வி நிறுவனங்களில் 65 சதவிகிதமும், சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் 50 சதவிகிதமும் கிடைக்கச் செய்தது.
பள்ளிக்கல்வித் துறையில் இரண்டு முக்கியமான சட்டபூர்வ சீர்திருத்தங்களைத் தமிழகம் கண்டது: ஒன்று, பள்ளிக் கட்டணங்களுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது; இரண்டு, சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வித் துறையில் – தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை – படிப்படியான ஆனால் திட்டவட்டமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இக்காரணத்தால்தான் தமிழகம் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் 42 என்ற அளவைத் தொட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க விகிதமாகும். மிக முக்கியமாக, பொது நுழைவுத் தேர்வு ஒழிப்பு உள்ளிட்ட சீர்திருத்தங்கள் தொழிற்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான தளத்தை விரிவுபடுத்தியுள்ளன. இத்தகைய சீர்திருத்தங்களால் ஏராளமான பெண்கள், கிராமப்புற மாணவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பெரும் பயன்களை அடைந்திருப்பதை அனுபவச் சான்றுகள் காட்டுகின்றன.
ஆலய நுழைவு
இப்படிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அப்பால், ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை கருணாநிதியின் இதயத்துக்கு மிக நெருக்கமானதாகும். அவரது சித்தாந்த வழிகாட்டியான பெரியார் அனைத்துப் பிரிவு மக்களின் ஆலய நுழைவு உரிமைக்கு இருந்த தடைகளைத் தகர்த்தவர். கேரளத்தில் வைக்கம் நகரில் நடந்த ஆலய நுழைவுப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றவர். அப்போது கருணாநிதி நடை பழகிக்கொண்டிருந்த ஒரு குழந்தை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள், இந்துக் கோயில்களின் அர்ச்சகர் பணியில் பாரம்பரிய முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற பெரியாரின் கோரிக்கை அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. 1970இல் அவருடைய அரசு இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆலய அர்ச்சகராக ஏற்கெனவே உள்ள அர்ச்சகரின் வாரிசுதான் நியமிக்கப்பட வேண்டும் என்ற சட்டபூர்வ கட்டாயம் ஆலய நிர்வாகிக்கு இல்லை என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது. அந்தச் சட்டம் மிகக் குறுகிய காலத்திற்கே நிலைத்திருந்தது. அதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சேஷம்மாள் *எதிர்* இந்திய அரசு என்று பெயர்பெற்ற அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் அந்தச் சட்டத்தில் அரசமைப்பு சானத்துக்குப் புறம்பானதாக எதுவுமில்லை என்றாலும், மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் 25, 26 ஆகிய சட்ட உரைகளை மீறுவதாக புதிய சட்டம் இருந்துவிடக் கூடாது என்று கூறியது. ஆலயத்தில் அனைத்து சாதியினர் நியமனங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது என விமர்சிக்கப்பட்டது. அதற்கு எதிரான ஒரு போராட்ட இயக்கத்தை பெரியார் அறிவித்தார். ஆனால், போராட்ட நாளுக்கு முன்னதாக அவர் காலமானார்.
கேரளக் கோயில் ஒன்றில் பிராமணர் அல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமிப்பது தொடர்பான என்.ஆதித்யன் *எதிர்* திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் 2002இல் அளித்த தீர்ப்பு, எவ்வித நிபந்தனையுமின்றி அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதை அனுமதித்தது. இதன் மூலம் தமிழக சட்டத்திற்கும் தடைகள் நீங்கியதாகக் கருதப்பட்டது.
2006இல் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே கருணாநிதி அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். இப்பிரச்சினை தொடர்பான சட்டச் சிக்கல்களை ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. ஆகம விதிகள் தொடர்பாகப் பயிற்சி அளிப்பதற்கான மையங்களையும் ஏற்படுத்தியது. சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆதி சிவாச்சாரியார்கள் *எதிர்* தமிழ்நாடு அரசு என்ற அந்த வழக்கில் 2011 டிசம்பரில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் சட்டம் செல்லும் என அறிவித்த அந்தத் தீர்ப்பு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதற்கான வழியைத் திறந்துவிட்டது. 2018ஆம் ஆண்டில், கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நாட்களில், ஜூலை 29 அன்று, பிராமணர் அல்லாத, அரசு மையத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் மதுரையில் உள்ள ஒரு கோயிலில், இந்து அறநிலையத் துறையால் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
முதலமைச்சராகப் பணியாற்றிய 19 ஆண்டுகளில் கல்வி, மக்கள் உடல்நலம், இட ஒதுக்கீடு, தொழில் எனப் பல்வேறு துறைகளில் கருணாநிதி மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கானவை. ஆயினும், நடைமுறைப்படுத்த முடியாமலிருந்த ஒரு சட்டச் சீர்திருத்தமாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் கடந்து போயிருக்கும். பிராமணர் அல்லாதாரின் நியாயங்களுக்கான இயக்கத்தை நூறாண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சி தொடங்கியது. ஆலய நுழைவுப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பெரியாரால், அர்ச்சகர் நியமன போராட்டத்தில் வெற்றிபெற முடியாமல் இருந்தது.
1977இல் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பேசிய அவரது இணையரும் திராவிடர் கழகத் தலைவருமான மணியம்மை, இந்தச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடியாததால் திராவிட இயக்க அடையாளமான பெரியார் தனது நெஞ்சில் தைத்த முள்ளோடு மரணமடைந்துவிட்டார் என்று கூறினார். கோயில்கள் சாதியத்தின் தகர்க்க முடியாத கோட்டைகளாகவே இருந்து வந்தன. அண்ணாகூடத் தனது இரண்டாண்டுக் கால ஆட்சியில் இதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்க இயலவில்லை.
ஐந்தாவது முறையாகவும், இறுதிச் சுற்றாகவும் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதியின் தோளில் இந்தப் பணி விழுந்தது. சாதியத்தின் வேரில் தாக்குதல் தொடுக்கும் சட்டபூர்வச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் பணிதான் அது. ஒரு நாத்திகரும், தனது வழிகாட்டியின் நெஞ்சில் குத்திய முள்ளை அகற்றிடச் சூளுரைத்தவருமான கருணாநிதிக்கு, சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது வேறு எதைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாகும்.undefinedundefined
அவருடைய நிர்வாகச் சாதனைகள் நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட வேளாண் பிரச்சினைகளிலிருந்து தொடங்கியிருக்கக்கூடும். ஆனால் கல்விக் களம், தொழில் துறை ஆகியவற்றிலும் நெடுங்காலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். மற்றவற்றைக் காட்டிலும், அவரது தலைமையிலான அரசுகள் எப்போதுமே சமூகநீதிக்கான சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளன. திமுக அரசுகள் மேற்கொண்ட ஒவ்வொரு சட்ட நடவடிக்கையின் அடிநாதமாகத் திராவிட இயக்க கோட்பாடுகள் இருந்தன.
ஒருவகையில், கருணாநிதி தலைமையிலான அரசுகளின் சட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வு என்பது, திராவிட இயக்கத்தின் தனித்துவம், அதன் வெற்றி ஆகியவை குறித்த ஆய்வுகளோடு பின்னிப் பிணைந்தவையே ஆகும். அரசியல், சட்டம் என ஆழமாக ஆராய்வதற்கான வளமான வரலாற்றுக் களம் இருக்கிறது. எந்த வரலாறானாலும் கருணாநிதியின் சட்ட ஆளுமைக்கு உரிய இடமளிக்காமல் முழுமையாக எழுதிவிட முடியாது என்பது உண்மை.
**நன்றி: ஃப்ரன்ட்லைன்**
**தமிழில்: அ.குமரேசன்**
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**
**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**
**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**
**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**
�,”