சிறப்புக் கட்டுரை: கண்ணுக்குப் புலப்படாத தொழில்முனைவோர்கள்!

public

தீபான்ஷு மோகன்

சஹானா பபி என்ற 45 வயது பெண் கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் வசித்து வருகிறார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து கொலகாத், ரனகாத் பகுதிகளிலிருந்து புதிய மலர்களை வாங்கி தனது கடைக்குக் கொண்டு வருகிறார். இவரது கடை முல்லிக் காத்தில் இருக்கிறது. முல்லிக் காத் இந்தியாவின் மிகப்பெரும் மற்றும் பரபரப்பான மலர் சந்தைகளில் ஒன்றாகும். கடந்த 35 ஆண்டுகளாக இவர் இச்சந்தையில் தொழில் செய்து வருகிறார். ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தொழில்புரியும் சஹானா, சில நாட்கள் இரவு நீண்ட நேரம் தங்கி மலர்களை விற்பனை செய்கிறார். கோயிலுக்கு வழங்குவதற்கும், அலங்காரப் பயன்பாட்டுக்குமே இவரது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மலர்களை வாங்கி செல்கின்றனர்.

முறையாகக் கல்வி பெறாதவராக இருந்தாலும் சஹானா பபிக்குப் பிரமிக்கத்தக்க தொழில் அறிவு இருக்கிறது. முல்லிக் காத் சந்தையில் விற்கப்படும் மலர் கூடைகள் குறித்து விவரமாக விளக்கமளிக்கிறார். அவரது சவால்கள் குறித்தும் அவர் கூறுகிறார். முல்லிக் காத் சந்தை மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக உள்ளது. சந்தையில் மலர்களுக்குக் கடும் தேவை இருந்தாலும், தொழிலை மேம்படுத்துவதற்கு மாநில அரசும், ஏஜென்சிகளும் எதையும் செய்யவில்லை. முக்கியமாக, கொல்கத்தாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

ஒரு தொழில்முனைவோராக இருக்கும் சஹானாவின் நீண்ட காலத் திட்டம், தனது லாபத்தை உயர்த்துவதே ஆகும். பருவகால லாப வரம்பு 6 முதல் 10 விழுக்காடு உயர வேண்டும் என்பது இவரது திட்டம். இந்தக் குறிக்கோளை எட்டுவதற்காக, கடன் வாயிலாக மூலதனம் திரட்டி இணைய வசதியுடன் தனிக் கடை அமைப்பதில் இவர் முனைப்புடன் உள்ளார். மேலும், அரசு மற்றும் தனியார் ஏஜென்சிகளிடம் பயிற்சி பெறுவது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, ஆன்லைனில் தடம் பதிப்பது எனப் பல திட்டங்களுடன் உள்ளார். தொழிலை வளர்ப்பதற்கு மொபைல், இணையம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

முல்லிக் காத் பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குமர்துளி. இப்பகுதியும் சிற்பங்கள் மற்றும் தெய்வச் சிலைகளுக்கு பெயர் பெற்ற சந்தையாகும். இச்சந்தையில் இரவும் பகலுமாக உழைத்து துர்கை சிலைகளையும், அவ்வப்போது ஆர்டரின் பேரில் அரசியல் தலைவர்களின் சிலைகளையும் செய்து வருகிறார் ஒய்ஷிக் தாஸ். 42 வயதான ஒய்ஷிக் தாஸ் தனது குடும்பத் தொழிலான சிற்பக் கலையை கடந்த 30 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். தனது 12 வயதில் துர்கை சிலைகளைச் செதுக்க தொடங்கினார். இப்போது ‘துர்கா பூஜா’ பண்டிகைக் காலத்தில் லாபம் சம்பாதிப்பதற்கு துர்கை சிலைகளை செய்து வருகிறார். இத்தொழிலில் ஒய்ஷிக் தாஸ் தனது முத்திரையைப் பதித்து பிரபலமாகியுள்ளார். தனது கடையில் தனியாக வேலை செய்யும் ஒய்ஷிக் தாஸ் பெரும்பாலான சிற்பங்களை ரூ.1,50,000 முதல் ரூ.2,00,000 வரை விற்பனை செய்கிறார்.

கூடுதலாக அம்பேத்கர், காந்தி போன்ற அரசியல் தலைவர்களின் சிலைகளைச் செதுக்குவதற்கும் இவருக்கு ஆர்டர்கள் வருவதுண்டு. கொல்கத்தாவில் மட்டுமல்லாமல் டெல்லி போன்ற பகுதிகளிலிருந்தும் ஆர்டர்கள் வருகின்றன.

சஹானாவின் வருத்தத்தைப் போலவே, ஒய்ஷிக் தாஸும் இச்சந்தை குறித்து வருந்துகிறார். இச்சந்தையின் தொழிலை மேம்படுத்துவதற்கு மாநில அரசுகளும், ஏஜென்சிகளும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பது ஒய்ஷிக்கின் வருத்தம். “இங்கு சிற்பக் கலைக்குப் பெரிதாக மதிப்பளிக்கப்படுவதில்லை என்பது பரிதாபமாக உள்ளது. ஆனால், நாங்கள் அக்கலையில் பேரார்வம் கொண்டுள்ளோம்” என்கிறார் ஒய்ஷிக்.

சஹானாவைப் போலவே ஒய்ஷிக்கும் கல்வியில் தேர்ந்தவர் அல்ல. ஆனால், கலைத்தன்மை கொண்ட சிற்பக் கலை தொழிலில் ஆழ்ந்த அறிவு பெற்ற தொழில்முனைவோராக உள்ளார். கடும் மழை பொழியும் காலங்களில் கூட ஒய்ஷிக் போன்ற சிற்பக் கலை தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையாக உழைக்கின்றனர்.

சில வாடிக்கையாளர்களின் வாயிலாக கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்குச் சிற்பம் செய்து தருவதற்கான வெளிநாட்டு ஆர்டர்களும் ஒய்ஷிக்குக்கு கிடைத்துள்ளது.

சஹானா, ஒய்ஷிக் ஆகிய இருவரது ஆழ்ந்த அறிவும், திறமையும், நகர்ப்புற இந்தியாவில் செழிக்கும் சிறு தொழில்கள் குறித்த பார்வையை வழங்குகின்றன. பொருளாதார மற்றும் தொழிற்கல்வியில் பெரிய தொழில் நிறுவனங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், இவர்களைப் போன்ற கண்ணுக்குத் தெரியாத சிறு தொழில்முனைவோர் குறித்துப் பேசப்படுவதில்லை. நகரங்களின் பொருளாதாரத்தை இவர்களே வடிவமைக்கின்றனர்.

மாநில அரசுகளும், ஏஜென்சிகளும் இவர்களது தொழிலை மேம்படுத்த உதவிபுரிவதோடு, அதற்கான கொள்கைகளும் உருவாக்கப்பட வேண்டும். உள்ளூர் தொழிலை மேம்படுத்துவதற்கு ஐந்து சவால்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவை, விலை, பொருள், சந்தையில் பொருளின் நிலை, பாதுகாப்பு, லாபம் ஆகியனவாகும். இவற்றின் அடிப்படையில் நகர்ப்புறச் சந்தைகளை மேம்படுத்துவதற்குக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

சஹானாவின் தொழிலை எடுத்துக்கொண்டால், புதிய மலர்களைச் சேகரித்து வைப்பதற்கான கிடங்குகள் இல்லை. இதனால் பகலில் மலர்களின் சில்லறை விலை கடுமையாகக் குறைகிறது, மாலையில் 50 விழுக்காடு வரை குறைகிறது. இதனால் அவரது லாபம் சரிகிறது.

ஒய்ஷிக்கின் நிலையோ, அவரது சந்தை பழைய கொல்கத்தாவின் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ளது. அதனால் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது அவருக்குச் சிரமமாக உள்ளது. மாநில அரசுகள் மனம்வைத்தால் தெருவோரக் கண்காட்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து சிற்பத் தொழிலை மேம்படுத்தலாம் என்கிறார் ஒய்ஷிக்.

மாநில அரசு இவர்களது தொழில் குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், பொருளாதாரம் மற்றும் தொழிலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கண்ணுக்குத் தெரியாத தொழில்முனைவோரின் பிரச்சினைகளைச் சரிசெய்து, கொள்கைகளை ஏற்படுத்தி அவர்களது பொருளாதார மதிப்புக்கு அங்கீகாரம் அளிக்க முடியும்.

**நன்றி:** [தி வயர்](https://thewire.in/business/india-invisible-entrepreneurs-local-economies)

**தமிழில்: அ.விக்னேஷ்**

**நேற்றைய கட்டுரை:** [மல்லையாவைத் தப்பிக்க விட்டது யார்?](http://www.minnambalam.com/k/2018/09/24/16)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *