^‘சியோமி’ பயனர்களுக்கு குட் நியூஸ்!

Published On:

| By Balaji

சியோமி போன்களின் இரண்டு மாடல்களில் தற்போது புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

விலை குறைவான போன்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் தேவை கருதி அவ்வப்போது தமது மாடல்களில் புதிய புதிய அப்டேட்களையும் வழங்கிவருகிறது சியோமி நிறுவனம். அந்த வகையில், Mi Max மற்றும் Mi Max Prime ஆகிய மாடல் செல்போன்களில் MIUI 10 Global Stable ROM எனும் அப்டேட்டைத் தற்போது வழங்கியுள்ளது.

ரெட்மி 5, ரெட்மி 5A, ரெட்மி நோட் 4 மற்றும் ரெட்மி 6 Pro ஆகிய மாடல்களுக்கு மட்டுமே முன்னதாக இந்த அப்டேட் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த இரண்டு மாடல்களுக்கும் இந்த அப்டேட் வந்துள்ளது.

இந்த புதிய அப்டேட்டின் வாயிலாக இனி நேர்த்தியான ஒலிகளைக் கேட்க முடியும். இதற்கென பிரத்யேகமாக ஸ்மார்ட் ஃபில்டர்ஸ் சாஃப்ட்வேர் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுபோல இனி படங்களை ஃபுல் ஸ்கிரீன் மோடில் பார்க்கும்போது துல்லியமான முறையில் காணலாம். மேலும் க்ளாக், நோட்ஸ் போன்றவற்றிலும் புதிய வசதிகளைப் புகுத்தியுள்ளது.

மொபைலில் Settings > About phone > System updates > Check for updates என சென்று இந்த வசதியைப் பெறலாம். இதை அப்டேட் செய்யும்போது மொபைலில் பேட்டரித் திறன் மிக அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதுபோல மொபைலுக்கு இடையூறு இல்லாத நெட்வொர்க் கிடைக்குமாறும் கவனித்துக்கொள்ளவேண்டும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share