வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஹாட்ஸ்டாரில் வெப் சீரிஸ் இயக்கத் தயாராகியுள்ளார் வெங்கட் பிரபு.
கேசினோவை மையமாகக் கொண்டு உருவான காமெடிப் படம் பார்ட்டி. ஜெய், சிவா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சென்றாண்டே இப்படத்தை முடித்த வெங்கட் பிரபு, பார்ட்டி ரிலீசுக்காக காத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சிம்புவுடன் முதன் முறையாக மாநாடு படம் மூலம் இணைந்த வெங்கட் பிரபு, இதன் கதைக்களத்தை அரசியல் களமாக உருவாக்கியிருந்தார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக ஒப்பந்தமானார். படத்திற்காக சிம்பு லண்டனில் சிகிச்சை பெற்று உடல் எடையை குறைத்து தயாராகினார். வெளிநாட்டிலும், ஊட்டியிலும், சில காட்சிகள் படமாகின.
இந்த நிலையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகிவந்தன. பொறுமையாக காத்திருந்த வெங்கட் பிரபு படம் மேலும் தள்ளிப் போகும் எனத் தெரிந்ததால் மாநாடு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் ஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்ம்-காக ஒரு வெப் சீரிஸ் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப் சீரிஸ் எப்போது தொடங்கும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் போன்ற விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”