சிபிஐ அதிகாரியின் ஊழலுக்கெதிரான வலிமையான ஆதாரம்!

Published On:

| By Balaji

லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானாவுக்கு எதிராக வலிமையான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐயின் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி ஏகே.பாசி நேற்று(அக்-30) தெரிவித்துள்ளார்.

மொய்ன் குரேசி என்ற இறைச்சி ஏற்றுமதியாளரிடமிருந்து (அவரை ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க) சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதனைத் தொடர்ந்து அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அதிகாரியாக ஏகே.பாசி நியமிக்கப்பட்டார்.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாதான் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ஏகே.பாசுவை சிறப்பு புலனாய்வுக்குழுவின் அதிகாரியாக நியமித்தார். அஸ்தானா மோடியால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் பிரச்சினையானது சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குநர்அஸ்தானாவுக்கும் இடையிலான பனிப்போர் மோதலாக சித்தரிக்கப்பட்டு இருவருமே கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர்,தற்காலிக சிபிஐ இயக்குநராக எம்.நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அலோக் வர்மாவின் ஆதரவு அதிகாரிகள் வேறு துறைகளுக்குஅதிரடியாக மாற்றப்பட்டனர். அப்படி மாற்றப்பட்ட அதிகாரிகளில் ஒருவர்தான் ஏகே.பாசி. இவர் அஸ்தானாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக்குழுவின் அதிகாரி என்பதால் போர்ட்பிளேயருக்கு துாக்கியடிக்கப்பட்டார்.

நேற்று ஏகே.பாசி தான் பதவி மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இது தொடர்பாக,ஏகே.பாசு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,தனது பதவி மாற்றம் உள்நோக்கமுடையது, விசாரணையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். லஞ்சம் வாங்கிய அஸ்தானாவுக்கு எதிராக வலிமையான ஆதாரங்கள் உள்ளன.எனவே உச்ச நீதிமன்றம் அந்த ஆதாரங்களை சமர்பிக்க வேண்டுமென்று உத்தரவிட வேண்டும். அஸ்தானாவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலானய்வுக்குழு அமைக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share