சினி டிஜிட்டல் திண்ணை: விஜய்க்குக் கதை சொல்லும் இளைஞர்கள்!

public

அலுவலக வைஃபை பாஸ்வேர்டு போட்டு லாக் இன் செய்ததும், வாட்ஸ் அப் அனுப்பிய படங்கள் மளமளவெனக் கொட்டத் தொடங்கின. ‘என்ன இதெல்லாம்?’ என ரிப்ளை செய்தது ஃபேஸ்புக். வாட்ஸ் அப் டைப் செய்ய தொடங்கியது.

“பத்திரிகையாளர்களை விஜய் சந்திச்சதுதான் இன்னிக்கு தமிழ் சினிமாவின் டிரெண்ட். ஒவ்வொரு முறை மேடையில் பேசும்போதும் ‘ஒரு குட்டிக் கதை’ சொல்றது விஜய்யின் வழக்கம். ஆனால், அவரே வியக்கும் அளவுக்கு அவரை பற்றி கதையா இணையத்தில் வெளியாகிட்டிருக்கு” என்ற மெஸேஜை வாட்ஸ் அப் அனுப்பியதும், ஃபேஸ்புக் படித்துவிட்டதற்கான அத்தாட்சியாக ப்ளூ டிக் விழுந்தது. தொடர்ந்து டைப் செய்தது வாட்ஸ் அப்.

“கிறிஸ்துமஸ், நியூ இயர் ஸ்பெஷலா ஒவ்வொரு வருடம் முடியும்போதும் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அந்தக் கூட்டத்துல பத்திரிகையாளர்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் வியாபாரம் சம்பந்தப்பட்டவர்களும் இருக்கிறது வழக்கம். இந்த வருடம் யூடியூப் ரிவ்யூ போடுறவங்களும் அதிக அளவில் இருந்தாங்க. புதிய ரிப்போர்ட்டர்களும் கணிசமான அளவில் இருந்தாங்க. ஆனால், விஜய்யைச் சந்திச்சிட்டு வெளியே வந்ததும் விஜய்யின் எளிமையான குணம், அடக்கம் அமரருள் உய்க்கும் இப்படி எழுதுன கதைகளால, ‘கோல்டு காயின்’ நல்லா வேலை செய்யுது போல என்று கேலி பேசும் அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்திட்டாங்க. மெச்சூரிட்டி இல்லாத செயலே இதற்கு அடிப்படைக் காரணம்னு சொல்றாங்க மூத்த பத்திரிகையாளர்கள். இதை அவங்க சொல்லித்தான் தெரியணும்னு இல்லை. இளம் ரிப்போர்ட்டர்கள் எடுத்துக்கிட்ட படத்துல எல்லாம் அவங்க கேமராவைப் பார்த்துக்கிட்டும், மூத்த பத்திரிகையாளர்கள் விஜய்கூட பேசிக்கிட்டு இருக்குற மாதிரி ஃபேஸ்புக்கில் சுற்றும் படங்களுமே அங்கே என்ன நடந்திருக்கும்னு சொல்லுது. இளம் வயசுலயே இவங்களுக்கு விஜய்யைச் சந்திச்சுப் பேசும் வாய்ப்பு கிடைச்சிட்ட ஆதங்கத்துல சொல்றாங்களோனு ஓர் இளம் ரிப்போர்ட்டருக்கு போன் போட்டு கேட்டால், ‘போட்டோ எடுக்கும் ஆர்வத்துல அவரோட பேச மறந்துட்டேன்’ என்கிறார். இன்னொருவர், ‘அவர் என்னவோ பேசினார். என்னன்னு காதிலேயே விழல’ என்கிறார். தமிழ் சினிமால யாரும் செய்யாத இந்த மாதிரி சந்திப்பை விஜய் முன்னெடுக்குறதுக்கான காரணமே, அந்த வருடத்துல அவரோட செயல்பாடு எப்படி இருந்தது; அடுத்த வருடம் எந்த மாதிரி இருக்கணும்னு விரும்புறாங்கன்னு தெரிஞ்சிக்கத்தான். நட்பு ரீதியா சந்திக்கும்போதுதான் விமர்சனமா இருந்தாலும் நேரடியா சொல்லத் தோணும், அதற்கான வாய்ப்பு கொடுக்கப்படலைன்னா சுத்தி வளைச்சு எழுதி நெகட்டிவ் வைபரேஷனை உருவாக்கும்னு சொல்லித்தான் ஒவ்வொரு வருடமும் இதை செய்துகிட்டு இருக்காரு. இந்தச் சந்திப்புலகூட ‘காதலை மட்டுமே அடிப்படையா வெச்சு ஒரு ரொமாண்டிக் ஸ்டோரில நடிங்க’ன்னு ஒருத்தர் சொன்னதுக்கு, கதை கிடைக்கல, நானும் தேடிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லியிருக்கிறார் விஜய். ஆனால், இதையெல்லாம் பேசுறதை விட்டுட்டு ஊருக்கே தெரிஞ்சதைத் திரும்பத் திரும்ப பேசிக்கிட்டிருக்காங்க” என்று வாட்ஸ் அப் அனுப்பிய மெஸேஜை ஷேர் செய்துவிட்டு, டைப் செய்து வைத்திருந்ததை போஸ்ட் செய்தது ஃபேஸ்புக். அதன் தலைப்பு ‘புலியைப் பார்த்து புலி சுட்டுக்கொள்ளாது’.

விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் போட்டி இத்தனை வருடங்களும் ஆரோக்கியமாகவே இருந்தது. இப்போதும் அப்படியே. ஆனால், யதேச்சையா நடந்த ஒரு சம்பவம் சிவகார்த்திகேயனோட இமேஜை கொஞ்சம் இறக்கியிருக்கு. சீதக்காதி படத்துல விஜய் சேதுபதி 40 நிமிஷங்கள் வர்றதாலதான், கனா படத்துல சிவகார்த்தியும் 30 நிமிஷங்கள் வரைக்கும் வர்றார் அப்படின்னு ஒரு பேச்சு. ஆனா, கடைசி வரைக்கும் சிவகார்த்தி போர்ஷன் இவ்வளவு நீளத்துக்கு வரவே இல்லை. கதைப்படி சிவகார்த்தி கேரக்டரில் வேற யாராவது நடிச்சிருந்தா, இந்தக் கேரக்டருக்கு இவ்வளவு பெரிய பில்டப் இருந்திருக்காது. ஆனால், சிவகார்த்தி நடிச்சதால கேரக்டருக்கு கனம் கூட்டணும்னு நீட்டிக்கிட்டே போய் அதிக நேரத்தைக் கொடுத்துட்டாங்க. அதனால்தான் ரசிகர்களால் படத்தோட ஒன்ற முடியாம போச்சு என்ற ரிப்போர்ட்டை சிவகார்த்தி தரப்புக்கு அனுப்பியிருக்காங்க. ‘நம்ம யாரையும் பார்த்து இதை செய்யல. நம்ம முயற்சியால கிடைச்ச பாடம் இது. அடுத்த தடவை கவனமா இருக்கணும். மத்தபடி நாம செய்தது தப்பு எல்லாம் இல்லை’ என்று படக்குழுவுக்குச் சமாதானம் செண்ட் ஆகியிருக்கிறது” என்ற ஃபேஸ்புக் போஸ்ட்டை ஷேர் செய்துவிட்டு, வைஃபையை ஆஃப் செய்தது வாட்ஸ் அப்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0