சினி டிஜிட்டல் திண்ணை: நயன்தாரா கடமை முடிந்தது!

public

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், ஃபேஸ்புக் பதிவின் நோடிஃபிகேஷன் வந்தது. லொக்கேஷன் மும்பை விமான நிலையம் எனக் காட்டியது. அந்த ஸ்டேட்டஸில், ‘கடைசி நேரம் வரை வருவரா? வரமாட்டாரா? என்று தெரியாமல் இருந்த கால்ஷீட்டை சண்டே மார்னிங் தான் ஓகே செய்துகொடுத்தார் நயன்தாரா. காரணம், மிஸ்டர் லோக்கல் பட டிரெய்லர் நல்லா வந்திருந்தது தானாம். சண்டே ஒருநாள் ஷூட்டிங் மட்டும் நடந்துட்டா போதும்னு தான் ஷூட்டிங்குக்கான எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சிருந்துட்டு காத்திருந்தது லோக்கல் டீம். ஆனால், மார்னிங் வரைக்கும் தர்பார் பட ஷூட்டிங்குக்காக மும்பையில் இருந்த நயன்தாரா ஆன்லைன் வரவே இல்லை. மிஸ்டர் லோக்கல் டிரெய்லரை அப்லோட் பண்ணிட்டு எல்லாருக்கும் அனுப்பி வெச்சிருக்காங்க படக்குழு. அதைப் பார்த்ததுக்கு அப்பறம் டீம்ல இருந்த பலரும் நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன பிறகு தான் அவருக்கு நியாபகம் வந்து ஃபோன் போட்டு ஓகே சொல்லி ஷூட்டிங் கிளம்பி வந்தார்” என்ற ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டு ஷேர் செய்துவிட்டு டிரெய்லரைப் பார்க்கச் சென்றது வாட்ஸப். அதற்குள் அடுத்த ஸ்டேட்டஸை டைப் செய்யத் தொடங்கியது ஃபேஸ்புக்.

“நயன்தாரா மிஸ்டர் லோக்கல் படத்துல நடிச்சதே 20 நாளிலிருந்து 25 நாளுக்குள்ள தான் இருக்கும். ஆனால், அந்த கால்ஷீட்டை முடிக்கிறதுக்குள்ளவே கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓடிப்போச்சு. நயன்தாரா கால்ஷீட்டை இன்னொரு தரம் வீணாக்கிட்டு, திரும்பவும் அவங்ககிட்ட தலையை சொறிஞ்சிக்கிட்டு நிக்கக்கூடாதுன்னு சிவகார்த்திகேயனின் பல புராஜெக்ட்களை நிறுத்தி வெச்சு ஒரு வழியா ஷூட்டிங்கை முடிச்சிட்டாங்க. கடைசி நாள் ஷூட்டிங்லயும் மேடம் சந்தோஷமாவே கலந்துக்கிட்டது பலருக்கும் ரொம்ப மகிழ்ச்சி” என்று லோக்கல் ஆட்கள் சொன்ன மேட்டரை ஃபேஸ்புக் பதிவிட, வாட்ஸப் ஒரு லிங்கை கமெண்ட் செய்தது. அதில், நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி இருந்தது. மிக்க மகிழ்ச்சின்னு கமெண்ட் போட்டுட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸப்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *