சித் ஸ்ரீராம் முதன்முறையாக இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு பாடகரின் பாடல்கள் தொடர்ந்து முணுமுணுக்கப்படும். ரசிகர்களிடம் கிடைக்கும் அத்தகைய வரவேற்பை தொடர்ந்து அதிகரித்துச் செல்வது ஒரு சிலரே. அந்தவகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடல் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். அதன்பின் தமிழ்சினிமாவில் அவரது அதிகமாக கேட்கத் தொடங்கியது. அதன்பின்னரும் அடுத்தடுத்து ரஹ்மான் இசையில் பாடிய அவர் முன்னணி இசையமைப்பாளர்கள் முதல் அறிமுக இசையமைப்பாளர்கள் வரை அனைவருடனும் இணைந்து பணியாற்றிவருகிறார்.
தற்போது மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இருப்பினும் இளையராஜா இசையில் பாடவில்லையே என்ற குறை இருந்தது. தற்போது மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தின்மூலம் அதுவும் நடந்தேறியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அந்தப் படத்தில் சித் ஸ்ரீராம் ஒரு பாடல் பாடியுள்ளார். நித்யா மேனன், அதிதீ ராவ், இயக்குநர் ராம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
�,”