சிங்கிள் பாய்ஸ் & கேர்ள்ஸ்க்கு டேட்டிங் அப்ளிகேஷன்கள்!

Published On:

| By Balaji

அன்னப்பறவை மூலம் தூது அனுப்பிய காலத்தில் காதலர்கள் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் இருந்தனர். ஆனால், இன்றைய நவீன உலகில் மக்கள் பெரும்பாலும் வலைதளங்களில் உள்ள பல அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி தனக்கு பொருத்தமான நபர்களைத் தேடிக்கொள்ளும் வழக்கம் பெருகி வருகிறது. இப்போதெல்லாம், தெரிந்த நபர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள நாம் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், யார் என்று தெரியாத ஒருவரை நமக்கு பொருத்தமானவரா? என அவர்களுடன் பேசிப் பழகிய பின்னரே தெரிந்து கொள்ள முடியும் . அந்த வகையில் காதலைத் தேடித் திரியும் நபர்களுக்கு பொருத்தமான நபரை கண்டறிய பல்வேறு அப்ளிகேஷன்கள் பயன்பட்டுவருகின்றன. ஐரோப்பிய கலாசாரத்தில் டேட்டிங் என்ற ஒன்று நடைமுறையில் இருக்கிறது. இந்தியர்களும் ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரத்தினை அதிக அளவில் தத்தெடுத்துக்கொள்வதாலோ என்னவோ டேட்டிங் என்பதும் தற்போது இங்கு நுழைந்துள்ளது. இன்று காதலர் தினம் கொண்டாடும் சிலர் இருக்க, இன்னும் சிலர் தனக்கு பொருத்தமான நபரைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த நபர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு அப்ளிகேஷன்கள் வெளிவந்தாலும் ஒரு சில மட்டும் அதிகமான பயன்பாட்டிலுள்ளது. அந்த சில அப்ளிகேசன்களை பற்றி காண்போம்.

**TINDER**

TINDER என்ற அப்ளிகேஷன் புதிய முறையில் பலரையும் இணைக்கும் ஒன்றாக மாறிவருகிறது. இதில் நம்மைப் பற்றிய தகவல்களை முதலில் பதிவேற்றம் செய்து உலகில் இருக்கும் பல கோடி மக்களில் நமக்கு பொருத்தமான சிலரைத் தேர்ந்தெடுக்க முடியும். அதன் பின்னர் அவர்களுடன் நமது தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள இயலும்.

மேலும் இந்த அப்ளிகேஷன், நாம் ஒருவரின் தகவல்களை லைக் செய்தல் மூலம் அவர்களுக்கு நம்முடைய தகவல் கிடைக்கப்பெறும் வகையில் செயல்படுகிறது. நமது தகவல்கள் நாம் லைக் செய்பவரின் எதிர்பார்ப்பிற்கு பொருத்தமாக இருக்குமெனில், அவரும் நமது புரொஃபைலை லைக் செய்வதன் மூலம் நம்முடன் தகவல் பரிமாற்றம் செய்யலாம்.

இதில் குரூப் தகவல் பரிமாற்றமும் உள்ளது. நாம் நமது விபரங்களை பதிவேற்றம் செய்யும்போது அதனுடன் நமது புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட வேண்டும். அந்த புகைப்படத்தை ஸ்வைப் செய்வதன் மூலம் புரொஃபைலை லைக் செய்வது எளிதாகிறது.

**OkCupid**

அனைத்து அப்ளிகேஷன்களும் ஒரே போல் தான் நமது தகவலைக் கொடுத்து அதன் பின்னர் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த அப்ளிகேஷனும் அதே போல் தான். ஆனால் இதன் செயல்பாடுகளில் மட்டும் சிறிய வித்தியாசம் உள்ளது. அதாவது நமது விபரங்களை மட்டும் வைத்து இதில் நமக்கு பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுத்து விடுவதில்லை. நம் விருப்பங்களைப் பொருத்தும் அதற்குத் தகுந்த நபர்களை தேர்வு செய்து தர உதவுகிறது. இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன் உடன் சேர்ந்து நமது பழைய நினைவுகளை வைத்தும், சில நபர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

**Coffee Meets Bagel**

இந்த அப்ளிகேசன் நமது பேஸ்புக் நண்பர்களுடனும் நமது தகவலைப் பகிர்ந்து நமக்கு விருப்பமான நபர்களை தேர்வு செய்யலாம். ஒருவர் நமது விபரங்களை லைக் செய்வதன் மூலம் தெரிவிக்கும் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள இந்த அப்ளிகேசன் நமக்கு 24 மணிநேர அவகாசம் வழங்கும் . அந்த நேரத்தில் நாமும் அதை லைக் செய்தால் இருவரும் Private Chat செய்ய இந்த அப்ளிகேசன் உதவுகிறது. இதில் mutual friends என்ற ஒரு வசதியும் உள்ளது. தேவையெனில் இந்த வசதியை நாம் பயன்படுத்திக்கொள்ளளாம்.

**Match.com**

TINDER அப்ளிகேஷன் போன்றே இதன் செயல்பாடும் அமைந்துள்ளது என்றும், இதன் பயன்பாட்டினை நாம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்படுத்தும் டிவைஸ்கலில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதில் நம் விபரங்களை எவ்வளவு நபர்கள் கண்டுள்ளனர் எனக் காண முடியும். அதன் மூலம் நாமும் அவரது விபரங்களை பார்க்க முடியும்.

**Plenty Of Fish**

உலகின் அதிக பயனர்கள் பயன்படுத்தும் பல அப்ளிகேஷன்களில் இந்த PlentyOfFish என்பதும் ஒன்று என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். சுமார் 70 மில்லியன் பயனர்களை இந்த அப்ளிகேஷன் கொண்டுள்ளது. இதில் அதிக விபரங்களை நாம் பதிவிடத் தேவையில்லை. நமது புகைப்படத்துடன் நமது வயது, படிப்பு என சிலவற்றினைக் குறிப்பிட்டால் போதுமானது. நமக்கு தேவையான நபர்களை நாம் தேடி அவர்களுக்கு செய்திகள் அனுப்பும் வசதிகள் இதில் உள்ளது. இதில் பேஸ்புக் போன்று message head பயன்படுத்திக் கொள்ள முடியும்.

**Show Real**

மற்ற அப்ளிகேஷன்களில் புகைப்படம் மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், நமது புரொபைலில் நம்மை அறிமுகம் செய்யும் வீடியோவைப் பதிவிட இந்த அப்ளிகேஷனில் வசதியுள்ளது. ஆனால் வெறும் 5 நொடிகள் கொண்ட வீடியோ மட்டுமே இதில் பயன்படுத்த முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். நம்மிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் வழங்குவதன் மூலம் வீடியோவை இந்த அப்ளிகேஷன் தானாக ரெடி செய்கிறது.

**Happn**

நமக்கு விருப்பமான நபர்களை தேடும் வசதியை அனைத்து அப்ளிகேஷன்களும் கொண்டிருந்தாலும் , பெரும்பாலும் நமது அருகில் இருக்கும் நபர்களை நாம் தேடி கண்டறிவது பெரும் கஷ்டமான செயல். அதற்கு மாற்று வழியாக நமது வாழ்வில் நாம் செல்லும் இடங்களில் இதே அப்ளிகேஷனைப் பயன்படுத்தும் பயனர்களைத் தானாக தேடி, அந்ஹ்ட பட்டியலை நம்மிடம் தருகிறது Happn அப்ளிகேஷன். அடிக்கடி ஒருவரை ஒரு இடத்தில் நாம் சந்திக்க நேரும் போது இந்த அப்ளிகேஷன் அதனைtஹ் தனியே சேகரித்து வைத்து குறிப்பிட்டு காட்டுகிறது. அவர்களுக்கு நமது விருப்பத்தைத் தெரிவிக்கும் வசதியும் இதில் உள்ளது.

**Siren**

இந்த அப்ளிகேஷனின் சிறப்பே இதனை நாம் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும் என்பது தான். இதில் தரப்பட்டுள்ள வசதியின் மூலம் நமது விபரங்களை நாம் மற்ற பயனர்களிடம் இருந்து Hide செய்து வைக்க முடியும். நாம் விரும்பும் நபர்களுக்கு மட்டும் நம் தகவலை தெரிவிக்கும் வசதிகள் இதில் உள்ளது. connect என்ற ஒரு icon-னை கிளிக் செய்வதன் மூலம் ஒருவரின் புரொபைலை நாம் லைக் செய்து நமது விபரங்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

bumble, Hinge, DragonFruit மற்றும் sapio என மேலும் சில பிரபலமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அந்த அப்ளிகேஷன்களும் மேல் குறிப்பிட்ட அப்ளிகேஷன்களைப் போன்ற வசதிகளை கொண்டவை.

-விக்னேஷ்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share