சிஎஸ்ஆர்: கிரண்பேடிக்கு யார் அதிகாரம் அளித்தது?

Published On:

| By Balaji

சிஎஸ்ஆர் திட்டத்தில் நிதி வசூல் செய்ய கிரண்பேடிக்கு அதிகாரம் அளித்தது யார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிஎஸ்ஆர் திட்டத்தில் ஆளுநர் மாளிகையைக் கைகாட்டி ரூ.80 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது. சமூக பொறுப்புணர்வு நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், புதுவை ஆளுநர் மாளிகையில் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யப்படவில்லை என கிரண்பேடி கூறிவருகிறார்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 19) செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “தனியார் பங்களிப்போடு அரசு வேலைகளை செய்வதற்கு தங்கள் அலுவலகத்தில் இருந்து எந்தவிதமான தகவல்களும் செல்லவில்லை என்றும் நிதி சம்பந்தமாக எந்தவிதமான தகவல் பரிமாற்றம் செய்யவில்லை என்றும் கிரண்பேடி பதிலளித்திருந்தார்.

மாநில அரசுக்கு நிதி வழங்குங்கள் என துணைநிலை ஆளுநர் கோரிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால், துணைநிலை ஆளுநர் அலுவலகமே தனியார் நிதி பங்களிப்பு சம்பந்தமாக செயல்பட்டு, அதன் மூலமாக மாநில மக்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாவூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டபோது, “ரூபாய் ஒரு கோடி தனியார் பங்களிப்பு நிதியை பெற திட்டமிட்டிருந்தோம். 80 லட்சம் ரூபாய் வந்துள்ளது” என்று கிரண்பேடி கூறியிருக்கிறார். இது பணமாக வந்துள்ளதா, காசோலையாக வந்துள்ளதா என்பது தெரியவில்லை. துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து பல தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தொலைபேசி சென்றுள்ளது. தனியார் பங்களித்து நிதி அளிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment