சாலை விதிமீறல்: பேருந்தை மறித்து பாடம் எடுத்த பெண்!

Published On:

| By Balaji

தவறான பாதையில் வந்த பேருந்திற்கு இடம் கொடுக்காமல், வழிமறித்து நின்ற பெண்ணின் தைரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அப்பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று, ஒன்வேயில் தவறான பாதையில் மற்ற வாகனங்களை முந்திக் கொண்டு வேகமாகச் சென்றுள்ளது. குறுகலான அந்த சாலையில் பேருந்து முந்தி செல்ல முற்பட்டபோது, எதிரே ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் பேருந்தின் முன்பு வந்து சிறிதும் அசராமல் நின்றுள்ளார்.

அப்பெண் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று விடுவார் என பேருந்தின் ஓட்டுநர் நினைத்த நிலையில், அந்த பெண் அசையாமல் பேருந்தை வழிமறித்தபடியே நின்று சாலை விதிகளை மதிக்க சொல்லியிருக்கிறார். இதனால் அப்பேருந்து ஓட்டுநரால் மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை திருப்பி சரியான பாதையில் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவரது தைரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பதற்கு இவர் நல்ல உதாரணம். தைரியமான இப்பெண்ணை வணங்குகிறேன். லெஜெண்ட் என ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் இப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share