சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட பணம் தொழிலதிபர் ஒருவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.
நேற்று (மே 26) நள்ளிரவில் சென்னை கோட்டூர்புரம் வரதாபுரம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் போலீசார். இன்று அதிகாலையில், லாக் தெருவில் ஒரு இருசக்கர வாகனம் வேகமாகச் சென்றதைக் கண்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றனர். அந்த வாகனத்தை இயக்கிய நபர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றதால், ஜீப்பில் பின்னால் துரத்தினர் போலீசார்.
அப்போது, வாகனத்தில் இருந்த மூன்று பைகள் கீழே விழுந்தன. அவற்றை அந்த நபர் திரும்பிவந்து எடுக்கவில்லை. அந்த பைகளைச் சோதனையிட்ட போலீசார், அதில் கத்தைகத்தையாகப் பணமும் சில நகைகளும் இருந்ததைக் கண்டனர். இதையடுத்து, அந்த பைகள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் அந்த பைகளில் இருந்தது பின்னர் தெரிய வந்தது.
அந்த பணம் ஹவாலா பணமா, கொள்ளையடிக்கப்பட்ட பணமா என்று போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள தொழிலதிபர் பாலசுப்ரமணியன் என்பவரது வீட்டில் அந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது பற்றி சைதாப்பேட்டை போலீசார் விசாரணை செய்தனர். பாலசுப்ரமணியன் வீட்டின் பின்புறமுள்ள மேற்பகுதி ஜன்னல் வழியாகக் கொள்ளையர்கள் புகுந்து பணத்தைத் திருடியதாக, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இங்கிருந்து கொள்ளையடித்துச் செல்லும்போதுதான், அந்த நபர் சென்ற இருசக்கர வாகனம் போலீசாரின் ரோந்து வாகனத்தைக் கடந்து சென்றுள்ளது.
நேற்றிரவு தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் ஹைதரபாத் சென்றதாகவும், அவரது மகள் அகிலா மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, வீட்டில் நடந்த கொள்ளை பற்றி அகிலா போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி ஆதாரங்கள், மற்ற தடயங்களைக் கைப்பற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொழிலதிபருக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கு இந்த கொள்ளையில் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)
**
.
**
[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)
**
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)
**
.
.�,”