சாதி அடையாளக் கயிறு விவகாரம்: அமைச்சரின் முரண்பட்ட கருத்து!

public

பள்ளிகளுக்கு சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடந்த 12ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் முக்கிய சாரம்சம், சாதி அல்லது மத அடையாளங்களுடன் கூடிய வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கைகளில் கட்டுக்கொண்டு பள்ளிகளுக்கு வரக்கூடாது என்பதுதான். ஆனால் இதனை கடுமையாக எதிர்த்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டுமெனவும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

இதற்கிடையே நேற்று சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், “ஆதிதிராவிட நலத் துறை அனுப்பிய சுற்றறிக்கை எனது கவனத்திற்கு கொண்டு வராமல், அப்படியே முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. பள்ளிகளில் என்றைக்கும் உள்ளது போல பழைய நடைமுறையே தொடரும்” என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஹெச்.ராஜாவின் கோரிக்கையை ஏற்கும் வகையில், மாணவர்கள் வண்ணக் கயிறு அணிந்து வரலாம் என்பதைத்தான் அமைச்சர் அவ்வாறு சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் விவாதத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இன்று (ஆகஸ்ட் 16) செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அப்படி ஒரு நிலையே பள்ளிகளில் இல்லை. எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என்று கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இது நேற்று அவர் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் முரண்படக் கூடிய வகையிலேயே உள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “சாதி வேற்றுமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் எண்ணம். அந்த கருத்தின் அடிப்படையில்தான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.கல்விக் கூடங்கள் மற்றும் வேறு இடங்களிலும் சாதி வேறுபாடு இருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிவிஎஸ் லூகாஸ்: பறிபோகும் வேலைகள்!](https://minnambalam.com/k/2019/08/16/17)**

**[அத்திவரதரை ஓ.பன்னீர் மும்முறை தரிசித்தது ஏன்?](https://minnambalam.com/k/2019/08/16/19)**

**[டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி: பன்னீர் சபதம்- எடப்பாடி பீதி!](https://minnambalam.com/k/2019/08/15/63)**

**[எனது சம்பளம் கட்சிக்கே: வைகோ](https://minnambalam.com/k/2019/08/16/13)**

**[நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!](https://minnambalam.com/k/2019/08/14/18)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *