சஸ்பென்ஸ் திரில்லராக உருவான ஏஞ்சலினா: சுசீந்திரன்

Published On:

| By Balaji

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஏஞ்சலினா திரைப்படம் பற்றிய முக்கியமான தகவல்களை சுசீந்திரன் கூறியுள்ளார்.

சசிகுமார், பாரதிராஜா இணைந்து நடிக்கும் கென்னடி கிளப் படத்தை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன், அதே சமயம் சத்தமே இல்லாமல் ஏஞ்சலினா என்ற சிறிய பட்ஜெட் படத்தையும் எடுத்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தில் நடிகராக அறிமுகமான சுசீந்திரன், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு இப்படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

“ஒரு விசாரணையிலிருந்து தொடங்கும் ஏஞ்சலினா சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ளது. முற்றிலும் இளம் கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை மையப்படுத்திய கதையாகும்”.

“சரன் சஞ்சய் கதாநாயகனாகும் அறிமுகமாகும் இப்படத்தில் கிரிஷா குரூப் நாயகியாக நடித்துள்ளார். சூரி மற்றும் தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆறாவது முறையாக இசையமைப்பாளர் டி.இமானுடன் இணைந்துள்ளேன். மொத்தம் ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் கொண்ட இப்படம் விறுவிறுப்பாக வந்துள்ளது” எனக் கூறியுள்ளார் சுசீந்திரன்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு அப்பல்லோவில் நடந்தது என்ன?](https://minnambalam.com/k/2019/06/20/76)**

**[கேரள நீரைத் தமிழகம் மறுத்ததா?](https://minnambalam.com/k/2019/06/21/31)**

**[பிரசாந்த் கிஷோர் பட்ஜெட்: கமலுக்குக் கட்டுப்படி ஆகுமா?](https://minnambalam.com/k/2019/06/21/28)**

**[போயஸ் கார்டன்: சசிகலாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்!](https://minnambalam.com/k/2019/06/20/18)**

**[ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!](https://minnambalam.com/k/2019/06/18/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel