சர்வதேச மகளிர் தினம் – கூகுள் புதிய டூடுல் வெளியீடு!

public

உலகெங்கும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதைச் சிறப்பிக்க கூகுள் நிறுவனம் வீடியோ வடிவில் டூடுல் ஒன்றை இன்று தனது முகப்புப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. 1.23 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த வீடியோவில் உலகெங்கிலும் உள்ள 13 நகரங்களில் இருந்து குழந்தைகள் உட்பட 337 பெண்கள் கலந்துகொண்டு, ‘ஒரு நாள் என்னால் முடியும்’ என்பதை அவரவர் மொழிகளில் சொல்லும்படியாக அமைந்துள்ளது. இதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா உட்பட பல பெண்கள் கலந்துகொண்டுள்ளனர். லண்டன், பாரிஸ் உட்பட 13 நகரங்களில் பதிவாகியிருக்கும் இந்த வீடியோவில் இந்தியாவைச் சேர்ந்த புதுடெல்லி நகரமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.