}சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்!

Published On:

| By Balaji

சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட பரியேறும் பெருமாள் படம் தேர்வாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஆனந்தி நடித்திருந்தார். யோகி பாபு, மாரிமுத்து, கராத்தே வெங்கடேசன், பூ ராம், சண்முகராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், சீனாவின் ஹைனான் தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு பரியேறும் பெருமாள் தேர்வாகியுள்ளது. இதன்படி மார்ச் 30ஆம் தேதியன்று ஹைனான் தீவிலுள்ள ஐந்து நகரங்களில் திரையிடப்படும்.

சாதி அடிப்படையிலான கொடுமைகளையும், வேறுபாடுகளையும் மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான மிக முக்கிய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் படத்தைத் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தலித் திரைப்பட மற்றும் கலாச்சார விழாவிலும் பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டது. இந்தப் படம் கன்னட மொழியில் ரீமேக் ஆகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment