2019ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுத விரும்புபவர்கள், இன்று (நவம்பர் 1) முதல் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் நாளன்றே இணையதளத்தில் சர்வர் கோளாறு காரணமாகச் சிக்கல் ஏற்பட்டது.
மருத்துவச் சேர்க்கை நுழைவுத் தேர்வான நீட் தேர்வை, இனிமேல் தேசிய தேர்வு முகமை நடத்தவுள்ளது. இந்த தேர்வு, வரும் மே 5ஆம் தேதியன்று நாடெங்கும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள், இன்று முதல் [தேசிய தேர்வு முகமையின்](https://www.nta.ac.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு, நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும். அதேபோல, அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஆனால், இணையதளத்தில் சர்வர் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விண்ணப்பங்களைப் பதிவு செய்ய முடியாமல் மாணவர்கள் தவித்தனர்.
பிற்பகலுக்குப் பின்னர், சர்வரில் ஏற்பட கோளாறு சரி செய்யப்பட்டது.�,