சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Balaji

கர்நாடகா விவகாரத்தில் சபாநாயகர் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் கூறமுடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியான மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 18 எம்,எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யக் கடிதம் கொடுத்துள்ளனர். இதன் மீது சபாநாயகர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று முதலில் 10 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும், அவர்களைத் தொடர்ந்து 5 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், ”ஜூலை 16ஆம் தேதி இந்த மனுவை விசாரிக்கும் வரையில் ராஜினாமா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது.

இம்மனு மீண்டும் இன்று (ஜூலை 16) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அப்போது, “ராஜினாமா விவகாரத்தில் எங்களை தகுதி நீக்கம் செய்வதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், எம்.எல்.ஏ.வாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் எந்த அரசாங்கத்திலும் அமைச்சராக முடியாது. ராஜினாமா மற்றும் தகுதி நீக்கம் என இரண்டுக்கும் கடிதம் கொடுத்திருந்தால் எதாவது ஒன்றைத் தேர்வு செய்ய முடிவெடுக்கலாம். ஆனால் தற்போது ராஜினாமா கடிதம் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் அதன் மீது என்ன முடிவு செய்ய வேண்டியுள்ளது. சபாநாயகர் ஏன் ராஜினாமா கடிதங்களைக் கிடப்பில் போட்டுள்ளார்? உச்ச நீதிமன்றத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்கச் சபாநாயகருக்கு உத்தரவிட முடியும்” என்று வாதிட்டார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு தங்களால் உத்தரவிட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், அவ்வாறு உத்தரவிட முடியும் என்றால், சபாநாயகருக்கு என்ன உத்தரவிட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share