அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதியளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இன்று விசாரிக்க முடியாது என்றும், நவம்பர் 11ஆம் தேதியன்று இம்மனுவை விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 20க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று (அக்டோபர் 31), இதனை அவசர வழக்காக முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இது தொடர்பான விசாரணை, ஏற்கனவே நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. அதற்குமுன், இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.
நவம்பர் 5, 6 தேதிகளில் சபரிமலை கோயில் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.�,