காலைல ஒரு ரவுடியை என்கவுண்டர் பண்ணிட்டாங்கன்னு தெரிஞ்சதும், என்ன ஏதுன்னு விசாரிச்சா அவர் பேர் வல்லரசாம். சரி வயசென்னன்னு பாத்தா 19. சரியா 20 வருஷத்துக்கு முன்ன விஜயகாந்தோட வல்லரசு படம் ரிலீஸானதுக்கப்பறம், அவரை மாதிரி ஒரு நல்ல போலீஸா வரணும்னு பேர் வெச்சிருப்பாங்களோன்னு யோசிச்சிக்கிட்டே ஆஃபீஸுக்கு வந்து டிவிட்டரை ஓப்பன் பண்ணா, ஜெயமோகனை அட்மிட் பண்ணி வெச்சிருக்காய்ங்க. சரி, என்ன பிராதுன்னு கேட்டா மாவு புளிச்சதுக்கு பிரச்சினையாம். சரி, அத வுட்டுட்டு வேற மேட்டருக்கு வந்துருவாங்கன்னு பாத்தா, ஜெயமோகனோட ஆதரவாளர்கள், இந்தியால எந்த எழுத்தாளனுக்கும் பாதுகாப்பு இல்லைன்னு பத்து பக்கத்துக்கு ரைட்டப் ரெடி பண்ணி வெச்சிருக்காங்க. ஐயா, மாவு பிரச்சினைல தாக்கப்பட்டதுக்கும், எழுத்தாளனுக்கும் என்னய்யா சம்மந்தம்னு கேட்டா, ‘வாய மூட்றா படவா. இப்டி இருந்தா அறிவார்ந்த சமூகம் எப்படி உருவாகும்’னு நம்மளையே ஏசுறாய்ங்க. இப்டிதான் நான் ஒரு தரம் மாவு வாங்க கிளம்புனப்ப, ‘மாவு இட்லிக்கா? தோசைக்கா?’ன்னு கேள்வி கேட்டேன். எல்லாம் ஒண்ணு தான் வாங்கியான்னு சொன்னாங்க. சரின்னு மாவு கடைக்கு போனா அங்க, ‘மாவு காலைல ஊத்தவா? இப்பவே ஊத்தவா?’ன்னு கேட்டாங்க. இது என்ன புது கொரளி வித்தையா இருக்கேன்னு, வீட்டுக்கு ஃபோன் பண்ணி கேட்டா, வீட்ல அரைச்ச மாவே புளிச்சிருச்சு. கிளம்பி வாங்கன்னுட்டாங்க. ‘சாரிக்கா, மாவு வேண்டாமாம்’னு சொன்னதும், அந்தக்கா பாத்த பார்வைல ஆயிரம் அடி விழுறதுக்கான சாத்தியக்கூறுகள் இருந்ததால, இட்லிபொடி ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டேன். ஒருவேளை அந்த இட்லிபொடி வாங்காம இருந்திருந்தா, நானும் அடி வாங்கியிருப்பனோ என்னவோ! சரி, நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் போய் வீக்கெண்ட் செலிபிரேட் பண்ணிட்டு வர்றேன். ஹலோ, அந்த மாவு பாக்கெட்டை எங்கம்மா வெச்ச?
**ரஹீம் கஸ்ஸாலி**
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா… எவ்வளவு பெரிய எழுத்தாளரா இருந்தாலும் தோசை மாவு வாங்கணும்ன்னா அவரேதான் கடைக்கு போயாகணும் என்பதுதான்.
**எனக்கொரு டவுட்டு**
போன் பண்ணி நல்லா இருக்கியான்னு கேட்டா, நீயாவது கேட்டியே என்பதை போய்,நல்லா இருக்கியான்னு கேக்குறான் காசு கேப்பானோ என்ற மனநிலையில் மனிதர்கள்..!
**கோழியின் கிறுக்கல்!!**
உங்கள் முகத்திற்கு நேரே விமர்சிப்பவரையும், முதுகுக்கு பின் புகழ்பவரையும் கண்டிப்பாக நம்பலாம்!!!
**mohanram.ko**
மேனேஜர் மீட்டிங் க்கு அழைக்கும் போது,
சிரித்துக் கொண்டே உள்ளே சென்று, சிரித்துக் கொண்டே வெளியே வரவைக்கும் வேலை சொர்க்கம்…
**amudu**
இரு சக்கர வாகனம் ஓட்டும் ஆண்களிடம் கூட பெண்கள் தைரியமாக லிப்ட் கேட்டு விடுகிறார்கள். பெண்களிடம் லிப்ட் கேட்க, ஆண்களுக்குத் தான் இன்னும் தைரியம் வரவில்லை.
**உள்ளூராட்டக்காரன்**
நான் மாவு வாங்க போனேன்…
மாவு கட்டோடு வந்தேன்….
**Lekha**
ஜெமோ தாக்கப்பட்டத்தை கொண்டாட்ட மனநிலையோடு அணுகும் இணையவாசிகள் அச்சமூட்டுகின்றனர்.இணையம் சைக்கோக்களின் கூடாரம் என யாரோ சொல்லியது நினைவுக்கு வருகிறது.
**அஜ்மல் அரசை**
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் தமிழகத்தில் இந்தியை திணிக்க நினைத்து வெளியிட்ட அரசாணையை சில மணிநேரங்களில் திரும்பப் பெற செய்ததே திமுக MP க்களின் முதல் சாதனை.
37 MPக்களால் என்ன செய்ய முடியும் என்று கூவிய கூமுட்டைகளுக்கும் அதற்கு முட்டு கொடுத்த கூமுட்டைகளுக்குமான பதிவு.
**குணா யோகச்செல்வன்**
அன்புள்ள ஜெமோ,
தாங்கள் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்று அடித்தவனிடம் சொல்லியிருக்கலாமே?! ~திருமாறன்
அன்பின் திரு,
அதுவரை வாய் வார்த்தையாக பேசிக் கொண்டிருந்தவன், இதைச் சொன்ன பின்புதான் கை நீட்டவே ஆரம்பித்தான். ~ஜெ
**நெஜமாதான் சொல்றியா?**
ரெஸ்யூம் வாங்கி வெச்சுக்கிட்டு, கூப்பிடுறோம் னு சொன்னாங்க.
அதுக்கு அப்புறம், அடுத்த நாள் கால் பண்ணி கேட்டதுக்கு
இப்போதைக்கு வேகன்ஸி இல்லை ஃபுல்லாயிடுச்சு.Better luck next time னு சொல்லிட்டானுங்க தம்பி
**உள்ளூராட்டக்காரன்**
அரைச்ச மாவை அரைப்போமா…
**ரஹீம் கஸ்ஸாலி**
இம்மாம்பெரிய எழுத்தாளர் ஜெயமோகனையே யாருன்னு தெரியாம தோசை மாவு வாங்கப்போன இடத்தில் கடைக்காரரு சாத்தி விட்டுட்டாரு. நாலு கிறுக்கலை கிறுக்கிவிட்டுட்டு நானும் பெரிய எழுத்தாளராக்கும்ன்னு தலைக்கு மேலே ஒளிவட்டம் போட்டுக்கிட்டு சுத்தும் ஆட்கள் வாய வச்சுட்டு கவனமா இருங்க, சொல்லிட்டேன்.
**ரஹீம் கஸ்ஸாலி**
மோடியை சந்தித்து 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கிய முதல்வர் எடப்பாடி!
எடப்பாடி: தமிழ்நாடு ஹே.. நம்ம கூட்டணி கண்டினியூ ஹே. பன்னீர் செல்வம் ஹே.. படா பிராப்ளம் ஹே…
மோடி: செவன் மினிட்ஸ் ஓவர் ஹே… யூ கோ ஹே…
இவ்வளவுதான் ஏழு நிமிடத்தில் பேசிருப்பாᏗ૨ ጋ uᏁ~ராச்
**Arjundreams43**
கொத்துவுட்ட மனநிலை
கோடானக் கோடி கவிதைகள்
அத்துக்கிட்டு போகுதடி
காத்தாடியா எம்மனசு
நெஞ்சில் துளிரவிட்ட காதல
இப்ப இனுக்கிகிட்டு போகுற..
வழிச்சி போடுற நெத்தி வேர்வையா
என்ன விரல் உதரி போகுற..
**அன்சாரி மஸ்தான்**
மக்களுக்காக நாடோ அரசோ அதிகாரிகளோ இல்லை ,,, என்பது ஊர்ஜிதமாகிக்கொண்டு வருகிறது
**அஜய் முருகேஷ்**
மதுரைக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது: அமைச்சர் செல்லூர் ராஜூ
ஆமா.. நம்ம தலைவரு மதுரையை சுற்றி உள்ள ஏரிகளை எல்லாம் தெர்மாகோள் வச்சு மூடிட்டாரு..
**ச ப் பா ணி**
பண்டைநாள் பெருமை பேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்.
-லாக் ஆஃப்.
**
மேலும் படிக்க
**
**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**
**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
�,”