|சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

public

சந்திர கிரகணத்தையொட்டி ஜனவரி 31ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 11 மணி நேரம் சாத்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சூரியன் – பூமி – சந்திரன் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக ஓராண்டில் அதிகபட்சம் ஏழு கிரகணங்கள்தான் வரும். அதில் நான்கு சூரிய கிரகணமாகவும், மூன்று சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். சில நேரம் ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். சந்திர கிரகணத்தின்போது அனைத்துக் கோயில்களின் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின்னர் கோயில்களைக் கழுவி சுத்தம் செய்வார்கள்.

இந்த நிலையில், ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் மாலை 5.18க்கு தொடங்கி இரவு 8.41க்கு முடிவடைகிறது. எனவே, அன்று காலை 11 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் இரவு 9.30 மணிக்கு நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோயில் நடை திறந்த பின்னர், ஆகம சாஸ்திர விதிகளின்படி, கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, அதன்பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தையொட்டி 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 4.30 மணியிலிருந்து 8ஆம் தேதி காலை 2 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *