தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமைந்திருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அலுவலகத்துக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மக்களவை தேர்தல், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சத்ய பிரதா சாஹூ அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மொட்டை கடிதம் வந்திருக்கிறது, இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் தலைமை செயலகத்துக்கு வந்த போலீசார் பெயர், முகவரி இல்லாத மொட்டை கடிதத்தை கைப்பற்றியதுடன் அலுவலகத்தில் முதல் தளத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி அலுவலகம் தவிர அந்தக் கட்டிடத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்கள் முழுவதும் சோதனையிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அலுவலகத்துக்கு வந்து செல்பவர்களைக் கண்காணித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அக்கடிதம் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”