மாதவன் – அனுஷ்கா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இறுதிச் சுற்று, விக்ரம் வேதா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மாதவன் *ராக்கெட்ரி: நம்பி விளைவு* படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தோன்றவுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இப்படத்தை மாதவேனே இயக்கி நடித்து வருகிறார். ஆங்கிலம், தமிழ், இந்தி என மும்மொழிகளில் தயாராகிறது இப்படம். *கன்னத்தில் முத்தமிட்டால்* படத்திற்குப் பிறகு 18ஆண்டுகள் கழித்து சிம்ரன் இப்படத்தின் மாதவன் நாயகியாக நடிக்கிறார்.
இவ்வரிசையில், *ரெண்டு* படத்திற்குப் பின் 13ஆண்டுகள் கழித்து அனுஷ்காவுடன் மாதவன் நடிக்கும் படமே சைலன்ஸ். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, அனுஷ்காவின் 14ஆவது ஆண்டு திரைவாழ்க்கையை கொண்டாடியது படக்குழு. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகரில் படப்பிடிப்பை மும்முரமாக தொடர்ந்து வந்தது சைலன்ஸ் ‘டீம்’.
இந்நிலையில், சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளது படக்குழு. அதிவிரைவில் நடந்து முடிந்த இப்படத்தின் படப்பிடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மாதவனின் மனைவியாக இப்படத்தில் நடிக்கும் அனுஷ்கா, வாய் பேச இயலாதவராக தோன்றவுள்ளார்.
புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் கில் பில் என்ற ஆங்கில படத்தில் நடித்த மைக்கேல் மேட்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஞ்சலி இப்படத்தில் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார்.
ஹேமந்த் மதூர்கர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மும்மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தெலுங்கில் நிஷப்த் என தலைப்பிடப்பட்டிருக்கிறது.
**
மேலும் படிக்க
**
**[காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 – 35ஏ என்ன சொல்கிறது?](https://minnambalam.com/k/2019/08/05/15)**
**[பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்](https://minnambalam.com/k/2019/08/04/40)**
**[வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!](https://minnambalam.com/k/2019/08/05/12)**
**[ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்](https://minnambalam.com/k/2019/08/05/9)**
**[காஷ்மீர் – 370: மாநிலங்களவையில் கடும் அமளி!](https://minnambalam.com/k/2019/08/05/33)**
�,”