‘ஃபேஸ் ஆப்’ மூலம் தன் முகத்தை பெண்ணாக மாற்றி ட்விட்டரில் பதிவிட்ட சதீஷுக்கு, சிவகார்த்திகேயன் அனுப்பிய ‘ரிப்ளை’ வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் சமீபத்தில் டிரெண்டாகி வரும் ஆப் என்றால் அது ‘ஃபேஸ் ஆப்’ தான். கடந்த 24 மணிநேரத்தில் நீங்கள் சமூக ஊடகங்களில் இருந்திருந்தால், உங்கள் நண்பர்கள் வயதானவர்களைப் போல, ஆண்கள் பெண்கள் போல, பெண்கள் ஆண்கள் போல என மாறி மாறி பதிவிடும் புகைப்படங்களை கவனித்திருக்கலாம். நம் புகைப்படத்தை இந்த ஆப்பில் ஏற்றினால், நம் விருப்பம் போல நம் முகத்தை எந்த தோற்றத்திலும் மாற்றிப் பார்த்து ரசிக்கலாம். தற்போது டிரெண்டிங்காகி வரும் இந்த ‘ஆப்’ மூலம் நட்சத்திரங்களும் தங்கள் முகத்தை மாற்றிப் பதிவிட்டு மேலும் இந்த ‘ஆப்’பை பிரபலமாக்கி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, வருண் தவான் உள்ளிட்டோர் இதனை பயன்படுத்தி தங்கள் வயதான தோற்றத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் தோனி, விராட் கோலி, ஷிகர் தவான் என தங்கள் ஆதர்சமான கிரிக்கெட் வீரங்களின் வயதான தோற்றத்தையும் இந்த ‘ஆப்’ மூலம் மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில், காமெடி நடிகரான சதீஷ் தன் முகத்தை பெண் போல மாற்றிய புகைப்படத்தையும், ‘கடைசில இந்தப் பொண்ணு தானானு’ என கமெண்டையும் போட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே வைரலான இப்புகைப்படம் நடிகரும் சதீஷின் நண்பருமான சிவகார்த்திகேயனின் கவனத்திற்கும் சென்றது.
சிவகார்த்திகேயன் தன் வழக்கமான பாணியில், ‘கடைசி மட்டும் தான் கன்ஃபார்ம். பொண்ணு டவுட் தான்’ என சதிஷீன் புகைப்படத்தை கலாய்த்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த ‘ரிப்ளை’ நெட்டிசன்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் எந்த ஈகோவும் இல்லாமல் நண்பர்களாக நடிகர்கள் கேலி செய்து விளையாடுவதை ரசிகர்கள் தங்கள் ‘லைக்’, ‘ரீட்வீட்’ மூலம் வைரலாக்கி வருகின்றனர்.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
�,”