சட்டவிரோத வழிபாட்டு தலங்களை அகற்றவில்லையா?: உச்சநீதிமன்றம்

public

சாலைகள், நடைபாதைகளில் இருக்கும் சட்டவிரோதமான வழிபாட்டுத் தலங்களை அகற்ற வேண்டும் என கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொது இடங்களில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடங்கள், கோவில்களை அகற்ற மாநில அரசுகளுக்கு பலமுறை தொடர் உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுகளை பல மாநில அரசுகள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தீர்ப்பைப் பின்பற்றாத சட்டீஸ்கர் அரசின்மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு கடந்த மார்ச் 8ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. தங்களுக்கும் சம்மன் அனுப்பவேண்டாம் என பிற மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோபால கவுடா, அருண் மிஸ்ரா ஆகியோர், சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், தவறினால் அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டியிருக்கும் என்று உத்தரவிட்டனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *