சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவோம்: அமித்ஷா

Published On:

| By Balaji

நாட்டில் எந்த பகுதியாக இருந்தாலும் சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டு சர்வதேச சட்டத்தின்படி அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படுமா என்று இன்று (ஜூலை 17) மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி ஜாவெத் அலி கான் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இது ஒரு நல்ல கேள்வி. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திய பாஜக தேர்தல் அறிக்கையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அங்கம் வகிக்கிறது. இந்திய மண்ணில் ஒவ்வொரு அங்குலத்திலும் வாழும் சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டு சட்டவிரோத சட்டத்தின்படி அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் அசாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவேட்டை வெளியிட ஜூலை 31ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாக மத்திய உள்துறை நிதியமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார். அவர் பேசுகையில், “24 லட்சம் விண்ணப்பதாரர்கள் கையெழுத்திட்ட மனு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பதிவேட்டில் குறைபாடுகளை சரிசெய்ய குடியரசுத் தலைவரும் கால நீட்டிப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பல உண்மையான பெயர்கள் தவறியுள்ளதாலும், போலி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாலும், காலக்கெடுவை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சிறிது தாமதம் ஏற்பட்டாலும் தேசிய குடிமக்கள் பதிவு முறையாக அமல்படுத்தப்படும். பதிவேட்டிலிருந்து உண்மையான குடிமக்கள் தவறிவிடக்கூடாது என்பதே அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார். இந்தியாவிலிருக்கும் ரொஹிங்கியா இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு அவர், “அதுபற்றி சரியான விவரங்கள் இல்லை. அவர்கள் நாடு முழுவதும் இருக்கின்றனர். சிலர் வங்கதேசத்துக்கு போய்விட்டனர். அவர்கள் குறித்த விவரங்களை விரைவில் பெறுவோம்” என்று பதிலளித்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share