சட்டக் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் ஆஜராக உத்தரவு!

Published On:

| By Balaji

சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடியிடம் நாளை (செப்டம்பர் 3) லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

சட்ட பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியருக்கு என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் 15 சதவிகித இடங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2016-2017 கல்வியாண்டில் 93 பேருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு எல்.எல்.பி ஹானர்ஸ் படிப்பில் இடம் ஒதுப்பட்டுள்ளது.

இதில், 18 பேர் மட்டுமே சரியான ஆவணங்கள் கொடுத்து படிப்பில் சேர்ந்திருப்பதாகவும் மற்ற 75 பேரும் போலியான ஆவணங்கள் மூலமே சேர்க்கப்பட்டு உள்ளதும், இவர்களில் ஒருவர் சசிகலாவின் அண்ணன் மகன் ஜெயராமன் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், முறைகேடாகப் படிப்பதற்கு அனுமதி அளிக்க லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக வணங்காமுடி மற்றும் அம்பேத்கர் பல்கலைப் பேராசிரியர்கள் ஜெய் சங்கர், சர்வாணி, பதிவாளர் பாலாஜி, துணைப் பதிவாளர் அசோக் குமார், நிர்வாக அதிகாரி ராஜேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், சட்டப்பல்கலைக்கழக துணை பேராசிரியர் பதவிக்கு தலா 20 லட்சம் ரூபாய் முதல் 30 ரூபாய் வரை லஞ்சம் பெற்று பணி நியமனம் நடைபெற்றுள்ளதையும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் வணங்காமுடிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் வணங்காமுடிக்கு உத்தரவிட்டுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share