^சசிகலாவை சந்தித்த நாஞ்சில் சம்பத்!

public

சசிகலாவின் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக நாஞ்சில் சம்பத் கூறினார்.

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கருத்து கூறாமல் ஒதுங்கியேயிருந்தார். மேலும், ஜெயலலிதா தனக்கு அளித்த இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து அவர் உறுதியாக அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார் என்று கூறப்பட்டது.

அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தீவிர இலக்கியப் பணியில் ஈடுபடப் போவதாகவும் பேட்டியளித்தார். அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சசிகலாவை தனக்குத் தெரியாது என்றும் கூறினார். இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவில் இருந்து தாம் விலகப்போவதாக வெளியான தகவலை மறுத்தார். இருந்தாலும் அதிமுகவில் நிலைத்து இருப்பது குறித்து தெரியாது என கூறினார். நான் இன்னும் அதிமுகவில் தான் நீடிக்கிறேன். நிலைப்பேனா என்று தெரியாது. பொது வாழ்க்கையில் இருந்தே விலக வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறேன். அதனால் என்ன முடிவு எடுப்பேன் என்று எனக்கே தெரியாது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் பண்பாட்டு மரபு. அதனால் தை மாதம் வரை காத்திருக்கலாம் என நினைக்கிறேன். அதிமுகவில் இருந்து நான் விலகுவதால் எந்த இழப்பும் வராது என்று அந்த பேட்டியில் அவர் கூறினார்.

அதை தொடர்ந்து, இன்று திடீரென அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை போயஸ் தோட்டத்திற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், தான் அதிமுகவில்தான் இன்னமும் தொடருவதாக கூறினார். தொய்வின்றி அதிமுகவில் பணியாற்றுவேன் . சசிகலாவின் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாகவும் கூறிய நாஞ்சில் சம்பத், தமிழகத்தின் மாண்பை காப்பாற்ற அதிமுகவில் நீடிப்பதாக கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *