O
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று(டிசம்பர் 14) காலையில் வள்ளி குகை அருகே உள்ள பிரகார மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.இதில், பேச்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார். கந்தசாமி மற்றும் செந்தில் ஆறுமுகம் ஆகிய இருவருக்கும் பலத்த காயமடைந்தனர் என்பதை இன்று [மின்னம்பலம் மதியம் 1 மணிப் பதிப்பில்](http://minnambalam.com/k/2017/12/14/1513255084)பதிவு செய்திருந்தோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள் என்பவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்களின் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய உடனடியாகக் களஆய்வு மேற்கொள்ளவும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
�,