கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்! : அப்டேட்குமாரு

public

கமல் சர்ச்சையை கிளப்புற மாதிரி குதர்க்கமா பேசுறார்னா அவர் படம் வெளிவரப் போகுதுன்னு அர்த்தம். அதே நேரத்துல கமலை எதிர்த்து ஏதாவது குரூப்பு வழக்கு, போராட்டம்ன்னு இறங்குனாங்கன்னா அவர் படம் வந்துருச்சுன்னு அர்த்தம். ஆனால் இப்ப இந்த ரெண்டும் நடக்காமல் கமலை சுத்தி இவ்வளவு அக்கப்போர் ஏன் நடக்குது? அதிமுக அமைச்சர்கள் எதிர் அணியினருக்கு பதில் சொல்றத விட கமலுக்கு தான் அதிகமா பதில் சொல்லிட்டு இருக்காங்க. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரான்னு போயஸ் கார்டன் பக்கம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துகிட்டு இருக்க ஆழ்வார்பேட்டையில இருந்து சத்தமில்லாமல் கமல் வரப்போகிறார் பாருங்க. அதுக்கு முன்னால அப்டேட்ட பார்த்துருங்க..

**@san_officl**

சாவு எல்லாருக்கும் வர்றது தான், நம்ம சாவ நினைச்சு வருத்தபடாட்டியும் பரவாயில்லை சந்தோஷபடாத அளவு வாழ்க்கை வாழ்ந்திடனும்…

**@thoatta**

இப்படியாவது ஓட்டுப்போடுங்கடா என்ற விரக்தியோடு, வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸில் பங்கேற்க அன்புமணி முடிவு

**@amuduarattai**

கூட்டுக் குடும்பங்கள் தொலைந்த பிறகு அங்கிள்,ஆன்டி என்ற உறவுகளைத் தவிர வேறு உறவுகள் இருப்பதை குழந்தைகள் அறியவில்லை.

**@manipmp**

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக எனும் செய்தி கேட்டு சிரித்துக்கொண்டான் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்

**@manipmp**

சன் டிவியில் சீரியல் பார்த்தால் மாமியார்,

விஜய் டிவியில் சீரியல் பார்த்தால் மருமகள்.!

**@naatupurathan**

கோழி செத்தா சிக்கன்,

ஆடு செத்தா மட்டன்,

மாடு செத்தா பீப்.,

ஆனா மனுசன் செத்தா பொணம்..!!!

தட்ஸால் யுவர் ஆனர்!

**@thoatta**

வழக்கமா படம் வெளிவரப்ப தானே பிரச்சனை செய்வீங்க, எனக்கு தான் இன்னமும் 2 வருசத்துக்கு எந்த படமும் வராதேன்னு அரசை இறங்கியடிக்கிறார் கமல்

**@Kozhiyaar**

ஞாயிற்றுக் கிழமையில் மனது மெதுவாகவும், கடிகாரம் வேகமாகவும் நகர்கின்றன!

**@Puthiya Bharathee**

தக்காளி விலையை குறைக்க

வீட்டுக்கு ஒரு தக்காளி செடி

வழங்கப்படும்

விளைச்சல் அதிகமாகி

விலை குறைந்திடும்

#செல்லூர்ராஜுபாறைகள் 🙂

**Sathya Sathesh**

ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசும்போது High Class ஆகவும் அதையே தமிழில் பேசும்போது கேவலமாகவும் பார்க்கிறது இந்த மானங்கெட்ட சமூகம் ….

**@ShivaP_Offl**

தண்டனை வாங்கிக்கொடுக்க சாதாரண வக்கீல்களையும்,

தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள திறமையான வக்கீல்களையும் தேடுகிறான் மனிதன்…!

**@Venpura Saravanan**

“கமலஹாசன் ஊழல்பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

கமலஹாசன் தனது திரைப்படங்களுக்கு முறையாக வரி செலுத்தனாரா என ஆய்வு செய்யட்டுமா?”

– அமைச்சர் வேலுமணி

*

“கோட்டத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்”

– வடிவேலு

**@SD Prabhakar**

செய்தி : துக்ளக் படிப்பவர்களில்

70% பேர் இந்தி கற்க

விரும்புகிறார்கள் – குருமூர்த்தி.

ரொம்ப நாளா எனக்கு ஒரு ஆசை. நம்ம ஆளுங்க எத்தனை பேரு துக்ளக் வாங்கி படிக்கிறாங்க என்று தெரிந்துகொள்ள.

குருமூர்த்தி இன்று அதை தெளிவுபடுத்திவிட்டார்.

**@Meenamma Kayal**

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு….. அதென்ன காக்கைக்கும்? காக்கான்னா அவ்வளோ எளக்காரமா… ரேசிஸ்ட் உலகமடா 🙁

**WritterMazhalai**

எந்த கமிட்மெண்டும் இல்லாத வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது

**senthilcp**

பருவநிலை மாற்றத்தால் சென்னை கடலில் மூழ்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை! #:கடன்ல மூழ்கியாச்சு,அடுத்து கடல்

**mujib989898**

செய்த தவறுக்கு உதாரணம் அல்லது காரணம் சொல்ல ஆரம்பித்தாலே செய்த தவறை ஒத்துக் கொள்ளாததற்கு சமம்…

**udanpirappe**

விஜய் படங்களுக்குள்ள ஒற்றுமை என்னனா,

விஜய் வராதா சீன்ல எல்லாம் கதை இருக்கும் !!!

**iam_Yobu**

விசேஷ வீட்டில்

பத்திரிகையில் பெயர் போட்ட உறவினர் ஒரு நாளைக்கு முன்பாக வந்தனர்

பத்திரிக்கையே கொடுக்காத நண்பன் ஒரு வாரமாய் கூடவே இருக்கிறான்.

**palanikannan04**

குறைந்த விலையில் வெங்காயம், தக்காளி -செல்லூர் ராஜு

இருக்கு, “தெர்மாகோல் திட்டம்” மாதிரி

செம எண்டர்டெயின்மெண்ட் திட்டம் ஒண்ணு இருக்கு”..

**@‎Sripriya Elango**

*ஒரு குட்டி கதை* – 🔐🔨

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது.

“உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?”

அதற்கு சாவி சொன்னது. “நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்”

அன்பு – உலகை – ஆளும்

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0