கோட்சே தேசபக்தர்: மன்னிப்பு கோரினார் சாத்வி பிரக்யா

Published On:

| By Balaji

காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கமலின் பேச்சு குறித்து மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூரிடம் செய்தியாளர்கள் நேற்று கருத்து கேட்டபோது, “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். எப்போதுமே அவர் தேசபக்தராகத்தான் இருப்பார்” என்று கூறியிருந்தார். தேசத் தந்தை என அழைக்கப்படுகிற காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என பாஜக வேட்பாளர் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன.

போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங், “கோட்சே தேசபக்தர் அல்ல; தேச விரோதி. சாத்வி பிரக்யாவின் கூற்றுக்காகப் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் மன்னிப்புக் கோர வேண்டும்” என கூறினார். இதுபோல பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மத்தியப் பிரதேச பாஜகவின் ஊடகப் பிரிவு நிர்வாகி லோகேந்திர பராஷர், சாத்வி பிரக்யாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். “சாத்வி பிரக்யாவின் கூற்றை பாஜக ஏற்றுக்கொள்ளாது. காந்தியைக் கொன்றவர் தேசபக்தராக இருக்க முடியாது” என்றார். பாஜக செய்தித் தொடர்பாளரான ஹிதேஷ் பாஜ்பாய், சாத்வி தன்னுடைய கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து நேற்று இரவே, கோட்சேவை தேசபக்தர் எனத் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார். இதுபோன்ற சர்ச்சையான கருத்தைக் கூறி அதற்கு இவர் மன்னிப்பு கோருவது இம்மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/26)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)

**

.

**

[அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/72)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share