கோட்சே இந்து அடிப்படைவாதி: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Published On:

| By Balaji

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு இந்து அடிப்படைவாதி என்ற தலைப்பில் விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தந்தை பெரியார் திராவிட கழகத் துணை தலைவரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார். “மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையின்போது காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு இந்து அடிப்படைவாதி எனப் பேசியதற்கு மதவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கோட்சே யார் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கப் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கோட்சேவைத் தேச பக்தர் என்று கூறி அடிப்படைவாத அமைப்புகள் கோயில் கட்ட முயற்சிக்கின்றன” என்று அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காந்தி உயிரோடிருந்தால் பாகிஸ்தான் பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருப்பார் என்றும், கடந்த 70 ஆண்டுகளாக இரு நாடுகளும் போரிட்டு வருவாயை வீணடிக்கின்றன என்றும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கோட்சே பற்றிய உண்மைகளை மக்களுக்குச் சொல்லும் வகையில், மயிலை மாங்கொல்லையில் வரும் மே 26ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் கடந்த 14ஆம் தேதி விண்ணப்பித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.

காவல் துறையிடம் கொடுத்த மனுவைப் பரிசீலித்து அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வரும் 22ஆம் தேதியன்று இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share