கொல்ல திட்டம்: பாஜக மீது லாலு மகன் குற்றச்சாட்டு!

Published On:

| By Balaji

பாரதிய ஜனதா கட்சியும், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கமும் தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் மகனும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் குற்றம்சாட்டியுள்ளார்

இது குறித்து தேஜ் பிரதாப் எஎன்ஐக்கு இன்று(ஆகஸ்ட் 23) அளித்த பேட்டியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மஹ்வாவு தொகுதிக்கு மக்களை சந்திக்க சென்றேன். அப்போது, ஒருவர் எனக்கு கைகொடுப்பது போல வந்து எனது கைகளை இறுகப்பற்றி கொண்டார். பின்னர் அவர் எனது கைகளை விடவே இல்லை. அவரிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றிய மக்கள் அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றினர். இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சதி. இங்கே எம்எல்ஏ, எம்பிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறபோது மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார்கள்”என்றும் குற்றம்சாட்டினார்

கடந்த ஜூலை மாதம் தேஜ் பிரதாப் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவில், “என்னுடைய அம்மா ராப்ரி தேவி, நான் எழுப்பும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதேநேரத்தில் என்னை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கு வற்புறுத்துகின்றனர். நான், மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்” என்று பதிவிடப்பட்டிருந்தது.

இந்தப் பதிவு பீகார் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.

இதுகுறித்து தேஜ் பிரதாப் யாதவ் காவல் துறையில் புகார் அளித்தார், அதில் “என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்திற்குள் பிளவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். எங்களுடைய குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆளும் கட்சியின் தலையீட்டால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேஜ் பிரதாப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share