Yவறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திங்கள்கிழமை (இன்று) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
பயிர்கள் கருகியதால் தமிழகத்தில் 400 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் 17 விவசாயிகள்தான் வறட்சியால் உயிரிழந்ததாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. வறட்சியால் உயிரிழந்த 400 விவசாயிகளின் குடும்பத்துக்கு வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்து வரும் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும் . மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கொடநாடு எஸ்டேட்டை அரசுடைமையாக்க வேண்டும். ஒரே மதம், ஒரே மொழி என்ற மத்திய அரசின் கொள்கையை ஏற்க முடியாது. நம் நாட்டில் எத்தனையோ பிரச்னை இருக்கும் நிலையில், அதில் கவனம் செலுத்தாமல். கீழடி அகழ்வாராய்ச்சிப் பணியில் இருக்கும் அமர்நாத்தை மாற்றுவது ஏன் என்று ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.�,