கொசுவுக்கும் இரக்கம் காட்டும் ஒரே அரசு! : அப்டேட்குமாரு

public

பச்ச புள்ளைக முதற்கொண்டு டெங்குனால செத்துகிட்டு இருக்காங்க. ஊருல பாதி பேர் பொழுது ஆஸ்பத்திரியில தான் விடியுது. சுகாதார துறை செயலாளர் டெங்குவால் 35 பேர் ‘மட்டுமே’ உயிரிழந்துள்ளார்கள்னு அசால்டா சொல்றாரு. அது என்ன ‘மட்டுமே’? அவங்கள்ல நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்களோ சொந்தக்காரங்களோ இருந்தாத்தான் சீரியஸ்னஸ் வருமா? கிரிக்கெட்ல விக்கெட் விழுற மாதிரி பேசுறாங்கப்பா. டெங்குவை ஒழிக்க முடியல இவங்க தான் கெயில் பைப் லைன் திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு வராம நடத்த போறாங்களாம். காலக் கொடுமை சார். அப்டேட்ல ஒருத்தர், ‘கொசுவைக்கூட கொல்ல மனம் வராத இரக்க குணம் கொண்டது அம்மா ஆன்மா வழிநடத்தும் இந்த அரசு’னு கலாய்ச்சுக்கிட்டு இருக்காரு. இது மட்டும் எடப்பாடியார் & கோவுக்கு தெரிஞ்சுதுன்னா உண்மையிலேயே மேடையில பேசிருவாங்க. இதுக்குலாம் சிரிக்கவா அழவான்னே தெரியல. அப்டேட்ட பாருங்க.

**ajmalnks**

மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளது: பொன். ராதா

உங்க பி டீமுக்கு நீங்கதானே செய்யனும்

**Sandy_Offfl**

பிறப்பு இறப்பு கடவுளின் கையில்

மனிதன் கையில் மொபைல் மட்டுமே

**ajmalnks**

தொழில்நுட்ப புரட்சி மூலம் புதிய இந்தியா உருவாக்கப்படும் -மோடி

இதுவரைக்கு உடைச்ச பர்னிச்சர்லாம் பத்தாதா?

**Selvatwitz**

பிரதமராக பதவியேற்று முதல்முறையாக சொந்த ஊருக்குச் சென்ற மோடி

தினமும் போக அதென்ன வெளிநாடா

**palanikannan**

மக்களுக்கு தீபாவளி முன்னரே வந்துவிட்டது -மோடி

ஏன், உங்க ஆட்சி கலைய போகுதா சார்…?

**Kozhiyaar**

வாழ்வில் சில உறவுகள் அட்டை போலவே, ஒட்டுவதும் தெரியாமல் உறிஞ்சுவதும் தெரியாமல்?!

**HAJAMYDEENNKS**

மீம்ஸ் என்ற வார்த்தையை ரொம்பநாளாக பீன்ஸ் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் – விஜயகாந்த் #

இதுக்கு என்ன மீம்ஸ் போட போறாங்களோ…!

**saravananucfc**

அரசியல்வாதிங்க காமெடியா பேசவே பொழுது விடியுது. கலாய்ச்சே நமக்கு பொழுது முடியுது. இதுல நாட்டோட மானம் கப்பல் ஏறி நம்ம பொழப்பு சிரிப்பா சிரிக்குது.

**amuduarattai**

“டெல்லி கொசுவினால் தான் டெங்கு பரவுது” என்று மத்திய அரசை தான், ஜாடைமாடையா நம்ம தமிழக அமைச்சர்கள் சொல்றாங்களோ??!

**Thaadikkaran**

மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளது: பொன். ராதா

ஏங்கய்யா பிரிச்சு பேசறீங்க, கண்ணு வேர்க்குது..!!

**Tamil_Zhinii**

மரண தண்டனை நிறைவேற்ற தூக்குக்கு பதில் மாற்றுமுறை மத்திய அரசுக்கு SC அறிவுரை

இதான் சாக்குனு கருடபுராணத்த நுழைச்சிட போறாங்க

**manipmp**

பார்த்தா பிடிக்கும்

பார்க்க பார்க்க பிடிக்காம போகும்

#பாகுபலி இன் விஜய்டிவி

**வாசுகி பாஸ்கர்**

சாருஹாசன்: ‘தமிழ்நாட்டுல அறுபது வருஷமா சாதி அரசியல் நடக்குது’

பாண்டே: ‘அப்போ யார் தகுதியான முதல்வர் வேட்பாளர் நினைக்குறிங்க?’

சாருஹாசன்: ‘அன்புமணி’

பிரியாணியில் வத்த குழம்பு ஊத்தி சாப்பிட்ட மாதிரி இருக்கு எனக்கு.

**Kannan_Twitz**

தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 35 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

-சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

‘மட்டுமே’ என்ற விளக்கத்தில் இருந்தே தெரிகிறது தங்களின் அக்கறை

**chithradevi**

பலருக்கு அடிக்கடி கைநழுவிப் போவது வாய்ப்பு மட்டுமல்ல பாத்ரூமில் சோப்பும்தான்

**Kozhiyaar**

கொசுவைக் கூட கொல்லாத இரக்க குணம் கொண்டது அம்மா ஆன்மாவின் வழிக்காட்டுதல் படி நடக்கும் ஆட்சி என்று மட்டும் தான் மார்த்தட்டிக் கொள்ளவில்லை!!

**வாசுகி பாஸ்கர்**

மகாத்மா காந்தியை சுட்டபோது, 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்று விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இருபது வருஷம் கழிச்சி, “துப்பாக்கியில் இருந்து” ன்னு கேஸை முடிப்பாங்க.

**HAJAMYDEENNKS**

வீட்டுக்கு 4 கொசுவலை இலவசம்..

இனி தேர்தல் அறிக்கைகளில் கண்டிப்பாக இடம்பெறும்…!

**ShivaP**

முகத்தையும் 365 டிகிரி வரைக்கும் சுழற்றமுடியுமென,

செல்பி எடுத்துக்கொண்டு இருப்பவர்களை சற்றுநேரம் நின்னு உன்னிப்பாக பார்த்தாலே தெரியும்

**vishnut**

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை உயா்வு – செய்தி

புதுபடம் இருக்கா கோயிந்தா.!

இருக்கு கோயிந்தா.!

Shareit ல அனுப்பு கோயிந்தா..!

**naatupurathan**

மோடியைப் போல் ஒரு பொய்யரை நான் பார்த்ததே இல்லை – ராஜ் தாக்கரே!

இப்பதான் இதையே கண்டு பிடிச்சீங்களா!

**கருப்பு கருணா**

பொதுமக்களின் நம்பிக்கைகளை ஊடகங்கள் மதிக்க வேண்டும் : குருமூர்த்தி

மொதல்ல நீங்க மதிக்க கத்துக்கோங்க குருஜி!

**HAJAMYDEENNKS**

ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு தீபாவளி இரட்டை சந்தோசத்தை கொடுக்கிறது…!

**aselviku**

ஆட்சியை விட்டுகொடுத்து ஜெ.விற்காக சிறைக்கு சென்ற சசிகலா தேசதுரோகியா?- தினகரன்

ஊழல் பண்ணினதுக்காக தானே போனாங்க..உப்பு சத்தியாகிரகத்துக்கா போனாங்க.

**வாசுகி பாஸ்கர்**

இன்றைய தேதியில் இந்த கேள்வியை கலைஞரிடம் கேட்டு இருந்தால்,

தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்களே?

பட்டியலில் இருந்து வெளியேற்றினால் தான் “பெருமை” என்கிற சூழ்ச்சியை தானே அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *