எத்திராஜ் பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்ற கைத்தறி உடைகளின் கண்காட்சிக்கு, அக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் கலந்துகொண்டு தங்களது அழகினையும், கைத்தறி ஆடையின் மேன்மையையும் தம்பட்டம் அடித்துச்சென்றனர். விழா ஏற்பாட்டாளர்களே அதிசயித்துப்போகும் விதத்தில், கைத்தறி ஆடையின் மீதான தங்களது அன்பினைக் கொட்டித் தீர்த்தனர் மாணவிகள்.
விழாவினை ஏற்பாடு செய்த திருமதி கே சுபாஷினி பேசியபோது “கைத்தறி உடையின் முக்கியத்துவம் தெரியாத மாணவிகள் குறைவாகவே இருக்கின்றனர். அவர்களது பொதுவாழ்வில் இந்த உடைகளை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட தேக்கம் தான் பெண்களிடமிருந்து கைத்தறி ஆடைகளை அவர்களிடமிருந்து விலக்கிவைத்திருக்கிறது” என்று கூறினார்.
மொத்த நிகழ்வினையும் பார்க்கும்போது, மாடர்ன் பெண்களுக்கு இருக்கும் சேலை கட்டும் பிரச்சினை தான் இவர்களுக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறதே தவிர, சேலையை உடுத்தத் தெரியும் எனும்போது, விழா முடிந்த அடுத்த சில நொடிகளில், மாடர்ன் உடைக்கு மாற்றிக்கொண்டு தேர்வுக்கு ஓடிய பெண்களைப் பார்க்கமுடிந்தது.
**எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற கைத்தறி ஆடை கண்காட்சியின் முழு வீடியோ:**
�,”