கைதிகளின் கையில் களிமண் துப்பாக்கி: அரசு விளக்கம்!

public

சிறைக் கைதிகள் கைகளில் துப்பாக்கி வைத்திருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த துப்பாக்கிகள் களிமண்ணால் ஆனவை என்று விளக்கமளித்துள்ளது உத்தரப் பிரதேச மாநில அரசு.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டச் சிறையில் இரண்டு கைதிகள் துப்பாக்கிகளுடன் வலம் வரும் காட்சியானது சமூக வலைதளங்களில் பரவியது. இது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில், கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டவர்கள் அம்ரிஷ் பதிபுரா, கவுரவ் பிரதாப் சிங் ஆகிய இரு கைதிகள் எனத் தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியில், “நான் கவுரவ் பிரதாப் சிங்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, “சிறை எங்கள் அலுவலகம்” என்று அந்த நபர் கூறுகிறார். “சிறையில் இருந்தபடியே யாரை வேண்டுமானாலும் கொல்ல முடியும். உத்தரவிட்டால், வெளியிலும் கொல்லப்படுவார்கள்” என இன்னொரு கைதி தெரிவிக்கிறார். சிறை வளாகத்தினுள் இந்த வீடியோ காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது சமூகவலைதளங்களில் பலத்த கண்டனத்தையும் கேள்வியையும் எழுப்பியது.

இந்த நிலையில், “அது உண்மையான துப்பாக்கி அல்ல. அது களிமண்ணால் செய்யப்பட்டது. அவர்கள் இருவரில் கவுரவ் பிரதாப் சிங் நன்றாக வரையக்கூடியவர். அவர் தான் இந்த துப்பாக்கியைச் செய்தது” என்று விளக்கம் அளித்துள்ளது உத்தரப் பிரதேச மாநில உள் துறை அமைச்சகம். உ.பி. கூடுதல் டிஜிபி (சிறைத் துறை) ஆனந்த் குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, சிறை நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டி சில சிறைக் கைதிகளால் இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

உன்னாவ் மாவட்டச் சிறை கண்காணிப்பாளர் ஏ.கே. சிங், “இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ மூன்று மாதங்களுக்கு முன்பு செல்போனில் எடுக்கப்பட்டதாகவும், அந்த செல்போன் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார் உ.பி. மாநில முதன்மைச் செயலாளர். இந்த வீடியோ காட்சிகளை 4 சிறை ஊழியர்கள் படமெடுத்ததாகவும், சம்பந்தப்பட்ட சிறைக் கைதிகளுடன் அந்த ஊழியர்களும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிபி – தலைமைச் செயலாளர்: எடப்பாடியின் புதிய ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/27/57)**

**[திமுக அழுத்தம்: காங்கிரஸிலிருந்து கராத்தே நீக்கம்!](https://minnambalam.com/k/2019/06/27/58)**

**[சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!](https://minnambalam.com/k/2019/06/26/26)**

**[டிஜிட்டல் திண்ணை: தமிழக முதல்வராகும் அமித் ஷா?](https://minnambalam.com/k/2019/06/26/90)**

**[முன்பதிவு: இளையராஜா போட்ட நிபந்தனை!](https://minnambalam.com/k/2019/06/27/24)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *