தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால் கேரளா மாநிலத்தின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடுக்கி, மலப்புரம் பகுதிகளில் ஜூலை 18 முதல் 20 ஆம் தேதி வரையும், வயநாடு, கண்ணூர் பகுதிகளில் ஜூலை 19 ஆம் தேதியிலும், எர்ணாக்குளம் மற்றும் திரிசூர் மாவட்டங்களில் ஜூலை 20 ஆம் தேதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 240 மி.மீ மழை பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் இடுக்கியில் ஜூலை 17 ஆம் தேதியும், கோட்டயம் பகுதியில் ஜூலை 18 ஆம் தேதியும் எர்ணாக்குளத்தில் ஜூலை 19 ஆம் தேதியும், பாலக்கோட்டில் ஜூலை 19, 20 ஆம் தேதிகளிலும், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் பகுதிகளில் ஜூலை 20 ஆம் தேதியிலும் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், “பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாக இருக்கும்படியும் வலியுறுத்துகிறேன்” என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து, தமிழ்நாடு வெதர்மேனும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை கேரளா மற்றும் தமிழக மலைத்தொடர்களில் பருவ மழை அதிகரிக்கும் என்பதால் ஜூலை 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கேரளாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை” என்று பதிவிட்டுள்ளார்.“சென்னையைப் பொருத்தவரை லேசான மழை மற்றும் தூறலுக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகம் நேற்று இடியுடன் கூடிய மழையை பார்க்கவில்லை. ஆனால், இன்று பார்க்க நேரிடும்” என பதிவிட்டுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”