கேரளம் –ஒரு மணி நேரத்தில் 5 விவாகரத்து வழக்குகள்!

public

நாளுக்குநாள் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளிடையே அருகிவரும் சகிப்புத்தன்மையும், பரஸ்பரம் மனம்விட்டுப் பேசக்கூட நேரமின்றி முழுநேரமும் பிஸியாக இருப்பதும், இதற்கு பெருமளவு காரணங்களாக இருக்கின்றன. இந்திய அரசு வெளியிட்டுள்ள விவாகரத்துபற்றிய புள்ளிவிபரக் கணக்கின்படி, இந்தியாவில் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விவகாரத்துகள் அதிகரித்திருக்கின்றன.

2014ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி, கேரளாவில்தான் அதிக விவகாரத்துகள் நடைபெறுகிறது. கேரளத்தில் ஒரு மணி நேரத்தில் 5 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்தில் பதியப்படுகின்றன. நாளொன்றுக்கு 130 வழக்குகள் விவகாரத்து வழங்கப்பட்டு முடித்து வைக்கப்படுகின்றன.

கொலை, கடத்தல் மற்றும் விபத்துகள் போன்றவற்றுக்கு எடுக்கப்படும் புள்ளிவிவரங்கள்போல விவகாரத்து வழக்குகளுக்கென்று தனி புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. ஆனால், நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், கேரளாவில் மட்டும் 2014ஆம் ஆண்டில் 47,525 விவகாரத்து வழக்குகள் நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விவாகரத்து அதிகமாக நடக்கும் மாநிலங்களில் முதல் இடத்தை கேரளாவும், இரண்டாம் இடத்தை மகாராஷ்டிரமும், மூன்றாம் இடத்தை கர்நாடகாவும், நான்காம் இடத்தை மத்தியப்பிரதேசமும், ஐந்தாம் இடத்தில் அரியானாவும் இருக்கின்றன.

வாழ்க்கைச்சூழல் மாறிவிட்டது. முன்னர் கணவன் வேலைக்குச் சென்று மனைவி வீட்டிலிருந்து கவனித்துக் கொள்வார். இப்போது, பொருளாதாரத் தேவைகள் காரணமாக கணவனும் மனைவியும் இருவருமே வேலைக்குச் சென்றாகவேண்டிய சூழலில், இது குடும்பம் என்னும் நிறுவனத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்குகிறது. யதார்த்தமான இந்தக் காரணிகள் ஒருபக்கம் இருந்தாலும், பெரும்பாலான விவாகரத்துகளுக்கான காரணியாக இருப்பது கணவன் மனைவிமீது நிகழ்த்தும் உடல்ரீதியான வன்முறையே என்கிறது நீதிமன்றத் தீர்ப்பின் ஆய்வுகள்.

2014ஆம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட அறிக்கையொன்றில், இந்தியாவில் 10 ஆண்களில் 6 ஆண்கள் தங்கள் மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாக தெரிவித்திருந்தது. ஆமாம்! இந்த பத்துப்பேரில் நீங்கள் எந்த ரகம்?�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *