கூட்டணியை நாங்கள்தான் முடிவு செய்வோம்: பொன்.ராதா

public

“பாஜகவுடன் யார் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை பாஜகதான் முடிவு செய்ய வேண்டும்” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான விவாதங்கள் அரசியல் அரங்கில் சூடாகியுள்ளன. அதிமுகவும் பாஜகவும் மறைமுகமாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல் வெளியானது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘கூட்டணி தொடர்பாக பாஜக விரும்பினாலும் இணைத்துக் கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

திருச்சியில் இன்று (ஜனவரி 18) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “பாஜகவுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணியில் வந்துசேரலாம் என்று கனவு காண வேண்டாம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. பாஜகவுடன் எந்தக் கட்சி சேர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது பாஜகதான். அதுபோலவே அந்தந்த கட்சிகளின் கூட்டணி குறித்து அவரவர்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“2014ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் பாஜகதான் தலைமையேற்க வேண்டும் என்று கூறின. எந்தவொரு காலத்திலும் பாஜக பெரியண்ணன் தனத்தில் நடக்காது. அனைவரையும் சரிசமமாகவே பாவிப்போம்” என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக நாங்கள் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. மறைமுகமாக பேச வேண்டிய தேவையும் பாஜகவுக்கு இல்லை. அப்படி இருக்கும்போது, அதிமுகவிடம் இத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்பதாக கூறுவது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

கூட்டணி தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவருடைய கருத்து. அவர் கூறியதில் தவறில்லை. கூட்டணி குறித்து பாஜக மேலிடம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *