கூட்டணினாலே சந்தர்ப்பவாதம் தானே: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

வாரேன்னு சொன்னாலும் பிரச்சினை, வரலைன்னு சொன்னாலும் பிரச்சினைன்னா அது ரஜினிக்கு மட்டும் தான் போல. நேத்து போட்ட பதிவு இன்னைக்கு வரைக்கும் வெடிக்குது. போர் வரும்போது வரேன்னு சொன்னவர் இப்போ வர்ற மாதிரி இருக்கும் போது எங்க போயிட்டார்ன்னு தேடிகிட்டே அடுத்த கட்சியில கொஞ்சம் பேர் சேர்ந்துட்டாங்களாம். எந்த கட்சியிலயும் ஏஜ் லிமிட் இல்லைங்குறதால வந்தவங்களை அவங்களும் சேர்த்துகிட்டாங்க. இந்தப் பக்கம் வைகோ ராசியில்லாதவர்ன்னு சொல்லி மீம் போட்டவங்க, ஸ்டெர்லைட் தீர்ப்பு வந்ததுக்கு அப்புறம் அவரை புகழ்ந்து ஸ்டேட்டஸ் போட்டுகிட்டு இருக்காங்க. இப்ப மட்டும் வைகோ ட்விட்டர், பேஸ்புக் பக்கம் வந்தா நெட்டிசன்களைப் பார்த்து பாசத்துல நம்மளை மிஞ்சிருவாங்க போலன்னு கண்ணுள்ள தண்ணி வச்சிடுவார். அப்டேட்டை பாருங்க.

**@Kozhiyaar**

ரோடு ரோலர் அடியில் மாட்டின தவளை மாதிரி நசுங்கின பிறகு தான், நம்ம வீட்டு ‘பேஸ்ட் ட்யூப்’க்கு ஒரு விடிவு கிடைக்குது!!!

**@Chandran00007**

ஜப்பான் நாட்டுக்கு துணை முதலமைச்சராக இருந்ததால்

#MADE_IN இந்தியா ஸ்டாலின்

இன்று முதல்

#MADE_IN ஜப்பான் ஸ்டாலின் என்று அழைக்கபடுவர்.!

**@AnirudhAakash4**

தங்கையின் திருமணம் முடிந்ததும் சோகத்தில் மூழ்கியது

டிவி ரிமோட்..!

**@selvachidambara**

தாளிக்கும் வாசனையை நம்பி சாப்பிட அமர்ந்துவிடுகிறோம் அது மூக்கிற்கானது நாக்கிற்கானதல்ல என பின்புதான் அறிகிறோம்

**@mohanramko**

எங்க ஆட்சியிலும் நலப்பணி நடந்ததுனு சொல்றயே, ‘அண்ணன்கிட்ட தானே கேட்கற, கேளு, எத்தனை சீட்டு வேணும்?’

**@shivaas_twitz**

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட கூடாது – மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் (சிசிஐ)

விடுப்பா… விடுப்பா… காவேரி பிரச்சனைனா சினிமாக்காரங்க களம் இறங்குறதும், காஷ்மீர் பிரச்சனைனா கிரிக்கெட் வீரர்கள் களம் இறங்காம தடுக்குறதும் நம்ம நாட்டுல சகஜம் தானே..?!

**@Annaiinpillai**

மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என ரஜினி அறிவித்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து 20,000 பேர் விலகல்! – செய்தி #

# ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன் டோட்டல் கூடாரமும் க்ளோஸ்?!

**@HAJAMYDEENNKS**

தமிழிசை எடப்பாடியை சீரியசாக புகழ்றாங்க

மக்கள் அதை காமெடியாக பார்க்குறாங்க !

**@sultan_Twitz**

சட்டப்பேரவையில் சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன் – கமல்ஹாசன் #

ஆமா உங்க ட்விட்டை படிக்குறவங்க தான் சட்டையை கிழிச்சிப்பாங்க..?!

**@Annaiinpillai**

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டினால் அபராதம் என்ற வாசகத்தை பார்த்து சிரித்தன மது கடை பார்க்கிங்கில் இருக்கும் பைக்குகள்!

**@amuduarattai**

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் சிபாரிசு வேண்டும் என்பதும் நெறிமுறையில் சேருமா.!?

**@shivaas_twitz**

முன்னெல்லாம் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறது மட்டும் தான் செய்தியா வரும்…

இப்போல்லாம், அந்த ரயில் போய் சேர்றதும் கூட செய்தியா வரும் போல..!

**@Suyanalavaathi**

“2 ஆண்டு ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் நடந்துள்ளது” – ஜி.கே.வாசன் #

சீட் வேணும்னா நேரடியா கேட்க வேண்டியது தான.. அது என்ன சுத்தி வளைச்சு கேட்டுகிட்டு

**@amuduarattai**

பிரதமர் மோடி தமிழகத்தை சுற்றிசுற்றி வருவது ஏன்? -ஸ்டாலின்.

நீங்க எதுக்கு வாரீங்களோ அதுக்கு தான்.!

**@RahimGazzali**

`பா.ஜ.க.வை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா!’- கே.பி.முனுசாமி

அந்த பாவத்துக்குத்தான், இப்ப பி.ஜே.பி.யினர் அதிமுகவை வச்சு செய்றாங்க.

**@amuduarattai**

கண்காணிப்பு கேமராக்களால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. – சென்னை காவல் ஆணையர்.#

போலீஸ் மேல் தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படல போல.!

**@vickytalkz**

சட்டசபையில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன் – கமல்

இப்போ யாரு உங்கள சட்டசபைக்கு அனுப்புறேன்னு சொன்னா?

**@parveenyunus**

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – ரஜினி # வாடகை தான் கொடுக்க மாட்டீங்க..ஆதரவுமா..?

**@RahimGazzali**

கூட்டணி விஷயத்தில் ரைட்ல இண்டிக்கேட்டர் போட்டுட்டு, லெஃப்ட்ல போற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, ஸ்ட்ரைட்டா போறதில் ராமதாஸ் கெட்டிக்காரரு.

**@HAJAMYDEENNKS**

அதென்ன சந்தர்ப்பவாத கூட்டணி ?

கூட்டணி என்றாலே அது சந்தர்ப்பவாதம்தான் !

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share