குழாய் உடைப்பு: மழைவெள்ளம் போல் பெருக்கெடுத்த குடிநீர்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும் இன்னும் தண்ணீர் தட்டுப்பாடு தீரவில்லை. மதுரைக்கு நீர் வழங்கும் வைகை அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்குக் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. சாலையெங்கும் மழை வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

மதுரை முடக்கு சாலை பகுதியில் வைகையிலிருந்து அரசரடி நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் மெயின் குழாயில் இன்று (ஜூலை 18) அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்ட உடைப்பு காரணமாகச் சாலைகளில் ஆறு போல் வெள்ளம் ஓடியுள்ளது. தண்ணீர் பஞ்சம் அதிகரித்திருக்கும் இந்த சூழலில் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குழாய் உடைப்பு குறித்து மாநகராட்சிக்குத் தகவல் கொடுக்கப்பட்டும் ஊழியர்கள் தாமதமாக வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நான்கு நாளுக்கு ஒருமுறை தான் தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் இவ்வளவு நீர் வீணாக வெளியேறியதால் மாநகராட்சி ஊழியர்கள் மீது மக்கள் அதிருப்தியில் அடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாநகராட்சி ஆணையர் விசாகன், ” நீரின் அதிகளவிலான அழுத்தத்தின் காரணத்தினால் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும் மாநகராட்சி பொறியாளர் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று குழாயைச் சரி செய்தனர். காலை 5.45 மணியளவில் அதிகளவு தண்ணீர் வெளியேறுவது கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. 11 மணி அளவில் குழாய் உடைப்பு முழுவதுமாக சரி செய்யப்பட்டது. கணிசமான நீர் வெளியேறியிருந்தாலும், முடக்கு சாலை மக்களுக்கு வழக்கம்போல் தண்ணீர் விநியோகிக்கப்படும் ” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share