[குரூப் 4 தேர்வுக்கு தடை கேட்டு மனு!

Published On:

| By Balaji

குரூப் 4 தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு இன்று (ஜூன் 14) முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. செப்டம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரத்திலேயே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாலமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான 500 காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் அதில் தேர்ச்சி அடைந்த நபர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் புதியதாக மற்றொரு தேர்வைத் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே இத் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்குப் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வருகின்ற 26ஆம் தேதிக்குள் இதற்குத் தக்க பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது..

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த முடிவு!](https://minnambalam.com/k/2019/06/14/41)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share