குடமுழுக்கு விழா: 1லட்சத்து 92ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

Published On:

| By Balaji

திருப்பதி ஏழுமலையான் கோயில் குடமுழுக்கு நடைபெறும் 6 நாட்களுக்கு 1 லட்சத்து 92 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா குடமுழுக்கு விழா வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது அதிக அளவில் பூஜைகள் நடத்தப்படும் என்பதால் அனைத்துவிதமான தரிசனங்களும், ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருமலையில் நேற்று (ஆகஸ்ட்,3) செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் குடமுழுக்கு விழாவை ஒட்டி 1 லட்சத்து 92 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.”

அதனைத்தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற கூடிய மகா குடமுழுக்கு என்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த மாதம் நடைபெற உள்ள வருடாந்திர பிரமோற்சவத்திற்காக அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel