தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் வரலாற்றையே மாற்றியமைக்கும் பல முடிவுகளை நமக்குத் தந்துகொண்டிருக்கிறது.
பொதுவாக ஒரு விஷயத்தை வரலாறு, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்று இரண்டாகப் பிரித்து வரையறுக்கலாம். வரலாறு என்பதை கல்வெட்டுகள், புத்தகங்கள் போன்றவற்றின் அடிப்படையில் கண்டறியலாம். ஏற்கனவே எழுத்துக்கள் தோன்றியிருக்கும் நிலையில் அவற்றின் உதவியோடு குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், தேதி, குறிப்புகள் இவற்றின் அடிப்படையில் அந்த காலகட்டத்தைக் கண்டறியலாம்.
ஆனால் வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டம் அல்லது மிகத் தொன்மையான காலகட்டத்தை கணக்கிடும் போது எழுத்து வடிவங்கள் எதுவும் கிடைக்கப்பெறாது. அந்த சூழலில் காலக்கணிப்பை அறிவியல் முறைகளின் அடிப்படையிலே கண்டறிய முடியும். அத்தகைய முறைக்கு கரிம கணிப்பு அல்லது காலக் கணிப்பு முறை என்று பெயர்.
1940களில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியரான ஒருவரால் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டது. வேதியியல் துறையில் தனது ஆராய்ச்சிகளுக்காக நோபல் பரிசு பெற்ற அந்த அறிஞரால் கண்டறியப்பட்ட கார்பன் டேட்டிங் முறை என்றால் என்ன? அந்த முறையைப் பயன்படுத்தி கீழடியில் எவ்வாறு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது? அதன் அடிப்படையில் கிடைத்த முடிவுகள் எவை? C14 என்றால் என்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு சமவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் பதிலளிக்கிறார்.
அவர் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரிக்கு அளித்த பேட்டியை வாசக நேயர்களுக்காகத் தருகிறோம். வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.
�,”