திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று (ஜூலை 12) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு வீடு திரும்பினார். அவரை இரு வாரங்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 85 வயதாகும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கி.வீரமணிக்கு, ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து இயக்கப் பணிகளில் சோர்வில்லாமல் செயல்பட்டுவருகிறார். இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு சுமார் 40 நிமிடங்கள் வரை 10 சதவிகித இடஒதுக்கீட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
வீரமணியின் உடல்நலம் குறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இன்று (ஜூலை 13) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ கிராம்” செய்துகொண்ட நிலையில், வீட்டில் இரண்டு வாரங்கள் ஓய்வுடன் இருந்து மறு ஆய்வு செய்த பின் வழக்கமான பணிகளைத் தொடருமாறு பிரபல மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பிய கழகத் தலைவர் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால், கழகத் தோழர்களும், நண்பர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”